கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, January 9, 2011

ளீ3,500 கோடி முதலீட்டில் இயற்கை காஸ் தொழிற்சாலை : மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து


தமிழகத்தில் இயற்கை எரிவாயு தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை யில் கையெழுத்தானது.
தமிழக அரசுக்கும் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 04.01.2011 அன்று தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் தமி ழக அரசு சார்பில் தொழில் துறைச் செயலர் ராஜிவ் ரஞ்சன், கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவன தலைவர் யோகேந்திரகுமார் மோடி ஆகியோர் கையெழுத்திட்டனர். சுரங்கம் மற்றும் கனிமத் துறை ஆணையர் தங்க கலியபெருமாள், நிறுவன தலைமை இயக்க அலுவலர் பிரசாந்த் மோடி, பொது மேலாளர் ராமமூர்த்தி ஆகி யோர் உடன் இருந்தனர்.
நிலக்கரி படுகை மீதேன் வாயுவை வணிக ரீதியாக உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனம் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனமாகும். இந்த நிறுவனம், மேற்கு வங்க மாநிலம் ராணிகஞ்ச் என்ற இடத்தில், நிலக்கரி படுகை மீதேன் வாயுவை உற்பத்தி செய்து, அசன்சால் மற்றும் துர்காபூர் ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகிறது.
அழுத்தமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் விற்பனை நிலையங்கள் மூலமாக மோட்டார் வாகன பயன்பாட்டுக்காக விநியோகித்து வருகிறது. தமிழ்நாட்டில் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பகுதி களை உள்ளடக்கிய மன்னார்குடி பகுதியிலுள்ள நிலக்கரி படுகை மீதேன் வாயு இருப்பு பகுதியை ஆய் வு செய்து, உற்பத்தி செய்வதற்கான அனுமதியை கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்துள்ளது.
உற்பத்தி சாத்தியக் கூறு உறுதியானவுடன், தொடக் கக் கட்ட ஆய்வுக்காக ரூ.100 கோடியை இந்த நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. வணிக ரீதியில் மேலும் ரூ.3,500 கோடியை முதலீடு செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால், அழுத்தமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு தமிழ்நாட்டுக்கு கிடைப்பதோடு சுமார் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இதுதவிர, ராயல்டி மற்றும் மதிப்பு கூட்டிய வரி மூலம் தமிழ்நாட்டுக்கு வருவாய் கிடைக்கும்.
இந்த தகவலை தமிழக அரசு செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
வீடுகளுக்கும் குழாய் மூலம் காஸ் இணைப்பு:
கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் நிறுவன தலைவர் யோகேந்திரகுமார் மோடி நிருபர்களிடம் கூறியதாவது:நிலக்கரி படுகை மீதேன் வாயுவை வணிகரீதியாக உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனம் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் நிறுவனம். மேற்கு வங்க மாநிலம் ராணிகஞ்ச் என்ற இடத்தில், நிலக்கரி படுகை மீதேன் வாயுவை உற்பத்தி செய்து, அசன்சால் மற்றும் துர்காபூர் ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகிறது.
அழுத்தமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை இந் தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் விற்பனை நிலையங்கள் மூலமாக மோட்டார் வாகன பயன்பாட்டிற்காக விநியோகித்து வருகிறது. திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கிய மன்னார்குடி பகுதியிலுள்ள நிலக்கரி படுகை மீதேன் வாயு இருப்பு பகுதியை ஆய்வு செய்து, உற்பத்தி செய்வதற்கான அனுமதியை எங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.
உற்பத்தி சாத்தியக் கூறு உறுதியானவுடன், தொடக் கக் கட்ட ஆய்வுக்காக ரூ.100 கோடி முதலீடு செய்யப்படும். வணிக ரீதியில் மேலும் ரூ.3500 கோடியை முதலீடு செய்ய இந்த நிறு வனம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தினால் அழுத்தமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு தமிழ்நாட்டிற்கு கிடைப்பதோடு சுமார் 1500 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இது தவிர, ராயல்டி மற்றும் மதிப்பு கூட்டிய வரி மூலம் தமிழ்நாட்டிற்கு வருவாய் கிடைக்கும்.
மேலும் கோவை, திருச்சி, நாகை மாவட்டங்களில் உள் ள சிறு தொழிற்சாலைகளுக்கு குழாய் மூலம் இயற் கை எரிவாயு வழங்கப்படும்.
இத்தொழிற்சாலை விரிவாக்கப்பட்ட உடன் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் வீடுகளுக்கும் குழாய் மூலம் காஸ் வழங்க வாய்ப்புள்ளது. அப்போது சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னை இருக் காது. மின்சாரம் மூலம் இயக்கப்படும் தொழிற்சாலைகள் காஸ் மூலம் இயக்கச் செய்யும் போது மின்சார சிக்கனம் ஏற்படும். அதற் கான நடவடிக்கையும் எடுக்க உள்ளோம்.
இவ்வாறு யோகேந்திரகுமார் மோடி கூறினார்.

No comments:

Post a Comment