கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, January 28, 2011

மணி விழா : கலைஞரிடம் ஆசி பெற்றார் அழகிரி


மத்திய அமைச்சர் அழகிரியின் 60 வது பிறந்த நாள், வரும் 30ம் தேதி வருகிறது. அன்று, நடக்கும் முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, முதல்வர் கருணாநிதி டெல்லி செல்கிறார்.

அதே சமயம், அழகிரியும் வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ளார். அதனால், தன் பிறந்த நாளன்று முதல்வரிடம் வாழ்த்து பெற முடியாது என்பதால்,

(27.01.2011) அன்று மத்திய அமைச்சர் அழகிரி, தன் மனைவி காந்தியுடன் முதல்வர் கருணாநிதி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சந்தித்து, மணி விழாவுக்காக வாழ்த்து பெற்றனர்.
உடன் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தயாளு அம்மாள், முதல்வரின் அக்கா சண்முக சுந்தரம்மாள், மல்லிகா மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், மு.க.தமிழரசு, செல்வம், செல்வி செல்வம், இயக்குநர் அமிர்தம் மற்றும் குடும்பத்தினர் இருந்தனர்.


மு.க.அழகிரி மணி விழாவில் 70 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் :

மதுரை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி, புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தென்மண்டல கழக அமைப்பு செயலாளரும், மத்திய மந்திரியுமான மு.க. அழகிரியின் மணிவிழாவை முன்னிட்டு 30-ந்தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம்:


* மணிவிழா நிகழ்ச்சி ராஜாமுத்தையா மன்றத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. அதில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதே போல் மாலை 5 மணிக்கு கோச்சடை பஸ் நிலையத்தில் 10 ஆயிரம் பேருக்கு உதவிகள் வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.

* மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி மைதானத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு உதவிகளை வழங்குகிறார்.

* அழகர்கோவில்,“போதி“ மனநல காப்பகத்தில் காலை 10 மணியளவில் பயனாளிகளுக்கு 10 கறவை மாடுகள், 1 கறவை மிஷின், பசுக்களை நிறுத்த ஷெட் ஒன்றும் வழங்கப்படுகிறது.

* மதியம் 12 மணியளவில் ஒத்தக்கடை யோகநரசிம்மர் திருக்கோயிலில் 6 ஆயிரம் பொது மக்களுக்கு சைவ அறுசுவை உணவை, காந்தி அழகிரி, கயல்விழி வெங்கடேஷ், துரை தயாநிதி ஆகியோர் வழங்குகின்றனர்.

மேலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், கள்ளழகர் கோவில், மதன கோபாலசுவாமி கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில்களில் மதியம் 12 மணியளவில் அறுசுவை சைவ உணவு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

அத்துடன் ஏழை, எளிய, நலிந்தோர் மற்றும் மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து அனாதை குழந்தைகள் இல்லம், மனநல காப்பகம், முதியோர் இல்லம் ஆகிய மையங்களிலும் சைவ, அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.

* மாலை 4 மணியளவில் டி.வி.எஸ். நகரிலுள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் பிரசாதம், இனிப்பு மற்றும் 3 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கணித உபகரணங்களை காந்தி அழகிரி, கயல்விழி வெங்கடேஷ், மாநகராட்சி மேயர் தேன்மொழி கோபிநாதன் ஆகியோர் வழங்கு கின்றனர்.

* மாநகர் மற்றும் புறநகர் சார்பாக 70 ஆயிரம் நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. அதுதவிர மாநகர் மற்றும் புறநகர் மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை மதுரை தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment