கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, January 9, 2011

ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு - முதல்வர் கருணாநிதி அறிவிப்பு


ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று ஆசிரியர்களுக்கு ஸி163 கோடி செலவில் கூடுதல் சலுகைகள் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரி வந்தனர். கடந்த ஆண்டு இதுபற்றி ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ்ரஞ்சன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியும் அரசுக்கு பரிந்துரை செய்தது. அதைத் தொடர்ந்து சம்பள உயர்வை அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
6வது ஊதியக் குழு மற்றும் அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு நியமித்த ஒரு நபர் குழு ஆகியவற்றின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும். மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதிய விகிதங்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. அவற்றின் அடிப்படையில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, ஆசிரியர்களின் கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டன. ஆசிரியர் சங்கங்கள் அளித்த கோரிக்கைகளை ஏற்று, பின்வரும் சலுகைகளை வழங்கி முதல்வர் கருணாநிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அது வருமாறு:
* தற்போது சாதாரண நிலையில் தர ஊதியம் ரூ.2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு வழங்கப்படும் சிறப்புப்படி 500 ரூபாய் என்பது 750 ரூபாயாக உயர்த்தப்பட்டு, அது தனி ஊதியமாக வழங்கப்படும். இதனால் இவர்கள் மாதம் ஒன்றுக்கு கூடுதலாக 1,088 ரூபாய் பெறுவார்கள். மேலும் இத்தனி ஊதியம் வரும் காலங்களில் ஆண்டு ஊதிய உயர்வுக்கும், அகவிலைப்படிக்கும், ஓய்வூதியத்திற்கும் கணக்கில் கொள்ளப்படும்.
* ரூ.4,300 மற்றும் ரூ.4,500 தர ஊதியமாக பெற்று வரும் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை இடைநிலை ஆசிரியர்கள் தற்போது பெறும் சிறப்பு படியான ரூ.500 தொடர்ந்து பெறுவார்கள்.
* பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தற்போது பெறும் தர ஊதியத்துடன் 200 ரூபாய் கூடுதலாக பெறுவார்கள். அதாவது, பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4,400 ரூபாய் என்பது 4,600 ரூபாய், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தர ஊதியம் 4,600 ரூபாய் என்பது 4,800 ரூபாய், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் தர ஊதியம் 4,300 ரூபாய் என்பது 4,500 ரூபாய், நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் தர ஊதியம் 4,500 ரூபாய் என்பது 4,700 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கப்படும்.
* ளீ4,600 தர ஊதியமாகப் பெறும் சாதாரண நிலையில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தற்போது வழங்கப்பட்ட சிறப்புப்படியான 500 ரூபாய்க்குப் பதிலாக மாதம் ஒன்று 750 ரூபாய் தனி ஊதியமாகப் பெறுவார்கள். இதனால் இவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 1,088 ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும்.
* மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தற்போது பெற்று வரும் தர ஊதியம் 5,400 ரூபாய்க்கு பதிலாக 5,700 ரூபாய் பெறுவார்கள். இதனால் இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 435 ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும்.
தற்போது கூடுதலாக அறிவிக்கப்பட்ட பணப்பலன் 1.1.2011 முதல் நடைமுறைக்கு வரும். மேற்கூறிய சலுகைகளினால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ 163 கோடி ரூபாய் தொடர் செலவினம் ஏற்படும். இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஏறத்தாழ 2 லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள்.

No comments:

Post a Comment