கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, January 15, 2011

சென்னையில் போலி என கண்டறியப்பட்ட 6 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு மீண்டும் பொருட்கள் வினியோகம் - தமிழக அரசு உத்தரவு


சென்னையில் போலி என்று சந்தேகத்தின் பேரில் ரேஷன் பொருட்கள் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்ட சுமார் 6 லட்சம் கார்டுகளுக்கு மீண்டும் பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள போலி ரேஷன்கார்டுகள் கணக்கெடுப்பு பணி 2008ம் ஆண்டு ஜுலை 1ம் தேதி தொடங்கி 4 கட்டங்களாக நடந்தது. இப்பணி கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி முடிவடைந்தது.
இதில், 15 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் இருப்பது தெரியவந்தது. சென்னையில் மட்டும் 6 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாவட்டங்களில் கண்டறியப்பட்ட ரேஷன் கார்டுகள் மீதான விசாரணையில், அவைகள் போலி என்று தெரியவந்ததால் அவைகள் ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் உள்ள கார்டுகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து, போலி ரேஷன் கார்டுகளுக்கு நியாய விலை கடைகளில் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது. சென்னையில் சரியான முறையில் விசாரணை செய்யாமல் கணக்கெடுப்பு பணி நடைபெற்று இருப்பது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, பல மாடி கட்டிடங்களில் அனைத்து வீடுகளுக்கும் சென்று விசாரணை செய்யவில்லை. மூன்று முறை விசாரணைக்கு சென்றும் வீட்டில் உள்ளவர்கள் வேலைக்குச் சென்று விட்டதால் விசாரணை செய்யவில்லை. குடிசைகளில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் மட்டுமே வீட்டில் இருந்ததால், அவர்களிடம் விசாரணை செய்யவில்லை.
வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள், பல காரணங்களினால் வீடுகளை அடிக்கடி மாற்றியுள்ளனர். பொருள் நிறுத்தம் செய்யப்பட்ட பின் மேல் முறையீடு செய்யலாம் என்பதை அறியாமல் பல குடிசைவாசிகள் உள்ளனர் என்று தெரியவந்தது.
இதையடுத்து, உண்மையான ரேஷன் அட்டைதாரர்கள் பாதிக்கப்பட கூடாது என்று அரசு கருதியது.
அதனால், சென்னையில் துறை அலுவலர்களை மீண்டும் தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டது. இப்பணியினை 2011 மார்ச் 31க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்பணி முடியும் வரை சென்னை நகரில் போலி ரேஷன் கார்டு என கண்டறியப்பட்ட 5,97,111 கார்டுகளுக்கு தொடர்ந்து பொருட்கள் வழங்கவும் அனுமதியளித்துள்ளது.
இத்தகவல் தமிழக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு உத்தவிட்டுள்ளதை அடுத்து, இந்த ரேஷன் கார்டுகளுக்கு , ரேஷனில் பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. வரும் மார்ச் மாதத்துக்குள் இந்த கார்டுகள் மீது மறு தணிக்கை செய்யப்படும்.
இதற்காக, வீடுகளில் விசாரணை செய்யப்படும். அதன் பேரில் தணிக்கை செய்து, போலியா, உண்மையான கார்டு தானா என்று இறுதி முடிவெடுக்கப்படும். அதுவரை இந்த கார்டுகளை காட்டி ரேஷனில் அரிசி, கோதுமை உட்பட பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்

No comments:

Post a Comment