கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, March 11, 2011

தொகுதி ஒதுக்கீடு எப்போது முடியும்? - முதல்வர் கலைஞர் பதில்



வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பு கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு முடிந்துவிடும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ் மாநில தேசிய லீக் கட்சிகள் இணைப்பு நிகழ்ச்சி, அண்ணா அறிவாலயத்தில் 10.03.2011 அன்று நடந்தது. முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இரு கட்சிகளும் இணைந்தன. முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப் ஆகியோர் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அவர்களுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க முன்னணியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது முதல்வர் கருணாநிதியிடம், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு எப்போது முடியும்? என்று நிருபர்கள் கேட்டனர். “நாமினேஷன் போடுவதற்கு முன்பு முடிந்துவிடும்” என்று முதல்வர் சிரித்துக் கொண்டே கூறினார்.
முன்னதாக காதர் மொய்தீன், திருப்பூர் அல்தாப் கூறியதாவது:
முஸ்லிம் சமுதாயம் ஒன்றிணைய வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தி வந்தார். அவர் வேண்டுகோள் ஏற்று நாங்கள் முதல்வர் முன்னிலையில் ஒன்றிணைந்துள்ளோம்.

இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment