கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, March 21, 2011

ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் சமூக நலம் மற்றும் சத்துணவு துறைகளில் சாதனைகள் - முதல்வர் கருணாநிதி பட்டியல்


கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறைகளில் பெண்களுக்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 20.03.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திராவிட இயக்கத்தின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மகளிர் முன்னேற்றம். 1967ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த தி.மு.க அரசும், அதைத் தொடர்ந்து 1969ல் எனது தலைமையில் அமைந்த தி.மு.க அரசும், பெண்கள் முன்னேற்றம் குறித்த பல சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி, சமுதாயத்தில் உயர்நிலை பெறவும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
1973ல் தமிழகக் காவல் துறையில் முதல் முதலாக பெண்கள் நியமனம்; இன்று லட்சக் கணக்கான ஏழை எளிய மகளிர் வாழ்வில் பொருளாதார விடுதலைக்கு வழி வகுத்துள்ள சுயஉதவிக் குழுக்களை உருவாக்கப்பட்டுள்ளது. 1989ல் தருமபுரியில் மகளிர் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஏழைப் பெண்களுக்கு ஈ.வெ.ரா. நாகம்மையார் பெயரில் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்; ஏழை கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து உட்கொள்ள தற்போது ரூ. 6000 நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவித் திட்டம்; 1990ல் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு; பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் தனிச் சட்டம்; 1996ல் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு; முதல் தலைமுறையாக தொழில் முனையும் மகளிர்க்கு மானிய உதவி; தொழில் வளாகங்களில் தொழில்மனை ஒதுக்கீட்டில் மகளிர்த் தொழில் முனைவோர்க்கு முன்னுரிமை என்பனபோல பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு பெண்கள் பல வழிகளிலும் முன்னேற்றம் அடைந்து வருவதை நினைவு படுத்த விரும்புகிறேன்.
பெண்கள் அனைவரும் கல்விபெற ஊக்கமளிக்க வேண்டும் என்ற நோக்கில் 8ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு ரூ.5000 நிதியுதவி வழங்கிய மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் 1989ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் அறிமுகப்படுத்தப் பட்டது. பின்னர் பெண்கள் அனைவரும் குறைந்தது 10ஆம் வகுப்பு வரையாவது படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இத்திட்ட நிதியுதவி 1996ல் ரூ.10000 என உயர்த்தி வழங்கப்பட்டது. ஆயினும், 2001ல் பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு இத்திட்டத்தை முடக்கி வைத்து, ஏழை எளிய பெண்கள் பயனடைவதைத் தடுத்தது. அந்நிலை யில், 2006ல் பொறுப்பேற்ற தி.மு.க அரசு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப் படுத்தியதுடன், நிதியுதவி ரூ. 10000 என்பதை ரூ.15000 எனவும் உயர்த் தியது. பின்னர், 2008ல் இத்திட்ட நிதியுதவியை ரூ. 20000 என்றும், அதனைத் தொடர்ந்து 1.4.2010 முதல் ரூ.25000 என மேலும் உயர்த்தி வழங்கி வருகிறது. இப்போது வெளியிடப் பட்ட தி.மு.க தேர்தல் அறிக்கையிலே கூட, இந்த ரூ.25000 தொகை, ரூ.30000 என, புதிய ஆட்சி மலருமேயானால் வழங்கப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.
அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ் வழங்கப் படும் நிதியுதவி, மணம் புரியும் தம்பதியரில் ஒருவர் ஆதி திராவிடர் அல்லது பழங்குடியினராகவும் மற்றொருவர் வேறு இனத்தைச் சார்ந்தவராகவும் இருந்தால் ரூ.20000 எனவும், மணம்புரியும் தம்பதியரில் ஒருவர் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவராக வும் மற்றொருவர் முற்பட்ட இனத்தைச் சார்ந்தவராகவும் இருந்தால் ரூ.15000 எனவும் உயர்த்தப்பட்டது. இத்திட்ட நிதியுதவி 1.4.2010 முதல் இரண்டு திட்டங்களுக்கும் ரூ.25000 மேலும் உயர்த்தப்பட்டு வழங்கப் படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் 11 ஆயிரத்து 383 தம்பதியருக்கு 20 கோடியே 89 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
விதவை மறுமண நிதியுதவி திட்டத்தின்கீழ் கடந்த ஐந்து ஆண்டு களில் 910 ஏழை விதவைப் பெண்களின் மறுமணம் செய்துகொள்ள ரூ. 1 கோடியே 72 இலட்சத்து 71 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு விதவைத் தாய்மார்களின் மகள் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஐந்தாண்டுகளில் 16,365 பெண்களின் திருமணங்களுக்கு 30 கோடியே 32 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் திருமண நிதியுதவி யாக வழங்கப் பட்டுள்ளது.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ் ஐந்தாண்டுகளில் 2220 பெண்களின் திருமணங்களுக்கு ரூ. 4 கோடியே 58 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
அரவாணிகள் என்று சொல்லப்படும் திருநங் கையர்களும் இந்தச் சமுதாயத்தின் அங்கம் என்பதால் அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக, Òதமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்Ó 15.4.2008 அன்று கழக ஆட்சியிலே தொடங்கப் பட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையில் அவர் களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இவ்வரசு வழங்கி வருகிறது.
திருநெல்வேலி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, தூத்துக்குடி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அரசுக் குழந்தைகள் காப்பகங்களுக்குக் கட்டடம் கட்டுவதற்கு ரூ. 4 கோடியே 33 லட்சம் மதிப்பில் கட்டடங்கள் கட்டப் பட்டுள்ளன.
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல், சட்டப்படி பெண்களின் பாதுகாப்புக்காக மாவட்ட சமூகநல அலுவலர்கள் தற்காலிகப் பாதுகாப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
31 மாவட்டங்களில் முழு நேர அலுவலர்களாக 31 பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் 31 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர்;
தமிழக அரசு, இந்திரா காந்தி மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதிய தேசியத் திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள கடும் அல்லது 80 சதவீதம் உடல் உறுப்புகள் குறைபட்ட பலதரப்பட்ட ஊனமுடைய, 18 வயது முதல் 64 வயது வரை உள்ளோர் இத்திட்டத் தின்கீழ் பயன்பெறுவர். இத்திட்டம் 31&3&2010 முதல் நமது மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் ரூ.200 மத்திய அரசின் பங்காகவும், ரூ.300 மாநில அரசின் பங்காகவும் வழங்கப்படுகிறது.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும், ‘முதியோர் ஓய்வூதியம்’ பெறத் தகுதியான ஆதரவற்ற முதியோர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், தகுதியிருந்தும் ஓய்வூதி யம் பெற இயலாதவர்களை இத்திட்டத்தின்கீழ் கொணர இவ்வரசு எடுத்த முயற்சியின் காரணமாக, தற்போது 2010&2011ம் நிதி ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை, 9 இலட்சத்து 78 ஆயிரத்து 677 பேர் பயனடைந்துள்ளனர்.
அரசு நடைமுறைப்படுத்தி வந்த ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத்திட்டத் தின் கீழ் பயனாளிகளுக்கு மாநில நிதியிலிருந்து வழங்கி வந்த ஓய்வூதியமான 200 ரூபாயை 1.9.2006 முதல் ரூ.400 என உயர்த்தி வழங்கிய இந்த அரசு, 1.12.2010 முதல் இந்த ஓய்வூதி யத்தை மாதம் ரூ. 500 என மேலும் உயர்த்தி வழங்கி வருகிறது.
65 வயதை எட்டிய, ஆதரவற்ற அரவாணி களையும் ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத்திட் டத்தின்கீழ் சேர்த்து, அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 400 ஓய்வூதியமாக வழங்கிடலாம் என்று 4&4&2008ல் அரசு ஆணையிட்டது. தற்போது இந்த ஓய்வூதியம் மாதம் ரூ.500 என வழங்கப்படுகிறது.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment