ஆர்.கே.நகர் தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சட்டப்பேரவை தேர்தல் அலுவலக திறப்பு விழா கொருக்குப்பேட்டை தியாகப்ப செட்டி தெருவில் 21.03.2011 அன்று மாலை நடந்தது.
மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். பகுதி செயலாளர் டன்லப் ரவி வரவேற்றார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து வேட்பாளர் பி.கே.சேகர்பாபுவை ஆதரித்து பேசியதாவது:
இந்த தேர்தல் பணிமனை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஒன்றுகூடி தேர்தல் வியூகத்தை வகுத்துக் கொள்ள பயன்படும். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மனு செய்தபின், இந்த அலுவலகத்தை திறந்து பிரசாரத்தை தொடங்கியுள்ளேன். இங்கு ஏராளமானோர் கூடியுள்ளீர்கள். இதன் மூலம் வெற்றி நம் பக்கம் என்று உறுதியாகி உள்ளது. அதனால் ஓய்வு எடுக்கச் சென்று விடக்கூடாது. வெற்றிக்காக இன்று முதல் அயராது பாடுபட வேண்டும்.
திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் வெளியிட்டுள்ளார். 2006 தேர்தல் அறிக்கை வெளியிட்ட போது, அதை நிறைவேற்ற முடியாது என்று எதிர்கட்சியினர் கூறினர். ஆனால் சொன்ன வாக்குறுதிகள் அத்தனையையும் நிறைவேற்றினோம். தொடர்ந்து எங்களை வெற்றி பெறச் செய்தால் ஏற்கனவே உள்ள திட்டங்களும் தொடரும், புதிய அறிவிப்புகளையும் வெற்றிகரமாகச் செய்து முடிப்போம்.
இல்லாவிட்டால் இந்த திட்டங்கள் எல்லாம் தொடராது என்பது முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் நாம் கண்ட படிப்பினையாகும். உதாரணமாக திருமண உதவி திட்டத்தில் வழங்கப்படும்
ஸி 5 ஆயிரம் என தொடங்கி 25 ஆயிரம் வழங்கி வருகிறோம், அடுத்து ஸி 30 ஆயிரம் வழங்குவோம் என அறிவித்துள்ளோம். முந்தைய ஆட்சியில் ஜெயலலிதா அந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டார். இதேபோல பல திட்டங்களை நிறுத்தியவர் அவர்.
எனவே மக்கள் நலத் திட்டங்கள் தொடர, 6வது முறையாக கருணாநிதி முதல்வராக ஆதரவு தாருங்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
திமுக துணை பொதுச் செயலாளர் எஸ்.பி.சற்குணபாண்டியன், எல்.பலராமன், வேட்பாளர் சேகர்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment