கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, March 19, 2011

தேர்தல் வியூகம் : கலைஞர் ஆலோசனை


சட்டப்பேரவை தேர்தல் பணிகள் பற்றி ஆலோசிப்பதற்காக, திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் 18.03.2011 அன்று மாலை 5.45 மணி முதல் இரவு 7.45 மணி வரை நடந்தது.
கூட்டத்துக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் (திமுக), தங்கபாலு (காங்கிரஸ்), ராமதாஸ் (பாமக), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), காதர் மொய்தீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கி.வீரமணி (திராவிடர் கழகம்), ஆர்.எம்.வீரப்பன் (எம்.ஜி.ஆர். கழகம்), பெஸ்ட் ராமசாமி (கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்), ஸ்ரீதர் வாண்டையார் (மூவேந்தர் முன்னேற்றக் கழகம்), என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி), செல்லமுத்து (உழவர் உழைப்பாளர் கட்சி) உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த வெளியே வந்த முதல் அமைச்சர் கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: 23ந் தேதி திருவாரூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்வார்களா?

பதில்: திருவாரூரில் நடைபெறும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள்.

கேள்வி: தமிழக சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் வருவார்களா?

பதில்: தேர்தல் பிரசாரமே இன்னும் தொடங்கவில்லை. வேட்புமனு தாக்கல்கூட நடைபெறவில்லை. வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பின்பு, பேசி முடிவு செய்யப்படும்.

கேள்வி: சட்டசபை தேர்தல் பிரசார யுக்தி எப்படி இருக்கும்?

பதில்: நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி பதில் அளித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறுகையில், “தோழமை கட்சிகளின் ஒத்துழைப்போடு திமுக அணி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆவார். மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம்” என்றார்.

வடமாவட்டங்களில் எங்கள் கூட்டணி வெற்றிவாகை சூடும் - திருமாவளவன் :

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,


சட்டசபை தேர்தலில் எவ்வாறு பிரசாரம் மேற்கொள்வது? என்னென்ன கருத்துகளை முன்னெடுத்துச் செல்வது? என்பது குறித்து முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் ஆலோசனை நடத்தினோம். கூட்டணி கட்சி தலைவர்களை மதித்து அரவணைத்து வழிநடத்தி செல்லும் தலைவராகவும், மிகுந்த சாதுர்யமிக்க தலைவராகவும் முதல் அமைச்சர் கருணாநிதி விளங்குகிறார்.

தி.மு.க கூட்டணி வலுவான கூட்டணியாக அமைந்துள்ளது. தி.மு.க. சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகள் கேட்போம். தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். வடமாவட்டங்களில் எங்கள் கூட்டணி 150 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிவாகை சூடும். ஒரே மேடையில் தலைவர்கள் பேசுவது குறித்தும் கருத்துகளை பரிமாற்றம் செய்தோம். வரும் 23ந் தேதி திருவாரூரில் ஒருங்கிணைந்த பிரசாரத்தை தொடங்குகிறோம் என்றார்.

தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - கி.வீரமணி :

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி,

முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான கருத்துகள் பரிமாறப்பட்டன. ஒவ்வொரு கட்சி தலைவரும் கூறிய கருத்துக்களை ஆழ்ந்து சிந்தித்து ஏற்றுக்கொண்டார். தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார்.

No comments:

Post a Comment