கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, March 22, 2011

வருக! வருக! வரிப்புலி வரிசையே வருக! - கலைஞர் அழைப்பு


திராவிடர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் களம் காண்போம் என, முதல் அமைச்சர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

வருக. வருக. வரிப்புலி வரிசையே வருக. எனும் தலைப்பில் முதல் அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேர்தல் களம்புகுந்திட பல்வேறு கட்சிகளின் பாசறைகள் ஏறத்தாழ தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரிசையில் நிற்கக்கூடிய தேர்ப்புரவி ஆட்பெரும்படையை உற்றுப் பார்க்கிறேன். அதில், இந்திரஜித்தனைக் காண முடியாத காரணத்தை உணர்ந்து கொண்டவுடன், அதைப்பற்றி அதிகம் கவலைப்படாமல் ஒருசில நிமிடங்கள் சிந்தனையில் ஈடுபட்டேன்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலான திராவிட உணர்வு பட்டுப்போகாமல் காப்பாற்றி வந்த பெரியார் எனும் பேருருவில், பிரிவுக்கணைகள் புகுந்து, இரு இயக்கமானது. அந்த இரு இயக்கங்களும் தேசத்தை ஆளும் சந்தியாக செழித்து வளர்ந்தது கண்டு அவ்விரண்டையும் அழித்தொழிக்க ஐதீகப்படை திரண்டது. இருபடைகளும் ஒரு படையாய் இருந்து செறுபகை வீழ்த்திட அணிவகுப்போம் வாரீர்.


வடக்கிருந்து பறந்து வந்த சமரசப்புறாவையும் அதன் சிறகொடித்து விரட்டிவிட்டனர் சதிகாரர்கள்.

சகோதர யுத்தம் தொடரட்டு:ம என்று, கண்ணியம் தறந்த காரியத்தில் ஈடுபட்டதால் திண்ணியராம் திராவிடத் தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் சிதறுண்டுபோக சிலந்திகள் வலைபின்னத் தொடங்கின.


அந்த வகையில் கிக்காத இயக்கம்தான் அண்ணா உருவாக்கிய திமுக எனும் இந்த தீரர்கள் மிகு இயக்கம்.


அதில் ஓரிரு தம்பிமார்கள் எங்கெங்கோ சிதறிப்போயினர் என்றாலும் அங்கெல்லாம் அலைந்து திரிந்து, அவர்களையும் ஒன்றிணைக்க அரும்பாடு பட்டவனின் கரம்தான் இந்தக்கரம்.


இந்தக் கரம் தழுவும் உணர்விலே கட்டுண்டு வாரீர் அனைவரும் ஒருங்கிணைந்து களம் காண்போம் என்றழைக்கும் வேளை இது.

திராவிடர்கள் நெல்லிக்காய் மூட்டை என எதிரிகள் துள்ளிக்குதிக்கும் நிலைதனை மாய்ப்போம்.


விடுபட்டோர், விரட்டப்பட்டோர், துரத்தப்பட்டோர் விலை போகாது வெங்குருதி தனிற்கமழ்ந்த எங்கள் வீரமூச்சு, தமிழ்மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர் வாகை சூட கண்மூடி தவம் இருக்கும் துறவிகளைப்போல - தூயஞானிகளைப்போல - நான் தவம் இருக்கிறேன்.

படைபலம் போதாது என்பதால் அல்ல இருக்கின்ற படை இன்னும் வலிமையாய் உறுதியாய் நிச்சயம் வாகை சூடுவதாய் அமைய வேண்டும். வருக. வருக. வரிப்புலி வரிசையே வருக.
தேர்தலை புறக்கணிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ள நிலையில், திமுக தலைவரும், முதல் அமைச்சருமான கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை, வைகோவுக்கு மறைமுக அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது என, அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

திமுவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திறந்த மடல் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வைகோவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்

No comments:

Post a Comment