கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 20, 2011

திமுக தேர்தல் அறிக்கையை பிரதானமாக வைத்து பிரசாரம் - மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேட்டி



திமுகவின் தேர்தல் அறிக்கையை பிரதானமாக வைத்து திமுக கூட்டணி பிரசாரம் செய்யும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
மதுரையில் 20.03.2011 அன்று நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்படுகிறது. ஏழை, எளிய மக்களிடத்தில் குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி காணப்படுகிறது. 2006 தேர்தலின் போது அவர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினார். அதே போல் இந்த தேர்தல் அறிக்கையிலும் அவர் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவார். சொன்னதை செய்வார் என ஏழை, எளிய மக்கள், கிராமத்து மக்கள் பேசி மகிழ்ந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இந்த தேர்தல் அறிக்கையை பிரதானமாக வைத்து பிரசாரம் செய்வோம். மதுரை நகரை பொறுத்தவரையில் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பது, மதுரை மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
பொதுவாக எங்கள் கூட்டணி கட்சித் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை காண்கிறோம். இன்று மதுரை மாவட்டத்தின் பல்வேறு தொகுதிகளுக்கும் சென்று பார்த்ததில் மக்கள் மத்தியில் தேர்தல் அறிக்கைக்கான வரவேற்பையும், திமுக கூட்டணி தொண்டர்களின் மத்தியில் எழுச்சியையும் கண்டேன். இதே நிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளது. எனவே, நான் ஏற்கனவே கூறியது போல், இந்த தேர்தலுக்கு பின்னர் அதிமுக என்கிற கட்சியே இருக்காது என்ற அளவில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். மதிமுக தேர்தலை புறக்கணிக்கவில்லை. அதிமுகதான் மதிமுகவை புறக்கணித்து இருக்கிறது. இதுதான் உண்மை. ஜெயலலிதாவின் ஆணவ போக்கு, அகம்பாவம் இன்னும் குறைந்தபாடில்லை என்று வைகோ கூறியிருப்பதைப் பார்க்கும்போது இப்போதுதான் வைகோவுக்குப் புரிகிறது போலும்.
இவ்வாறு கூறினார்.
தி.மு.க.வில் சேர்ந்த மார்க்சிஸ்ட் கவுன்சிலர் :
மதுரை மாநகராட்சி 64வது வார்டு மார்க்சிஸ்ட் கவுன்சிலர் பழனிச்சாமி 20.03.2011 அன்று அக்கட்சியிலிருந்து விலகி மத்திய அமைச்சர் மு.க.அழகிரி முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார். அப்போது புறநகர் மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி, நகர் மாவட்ட துணை செயலாளர் உதயகுமார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, துணை மேயர் மன்னன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கவுன்சிலர் பழனிச்சாமி கூறுகையில், “கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை ஜெயலலிதா அவமதித்து விட்டார். சீட்டுக்காக இவர்களும் அதிமுகவில் கெஞ்சிக் கூத்தாடியது எனக்குப் பிடிக்கவில்லை. அதை விட முக்கியமாக முதல்வரின் சாதனைகளும், அவர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையும், மத்திய அமைச்சர் அழகிரி தொண்டர்களை அரவணைக்கும் பாங்கும் என்னை கவர்ந்தன. இதனால் திமுகவில் சேர்ந்தேன்“ என்றார்.

No comments:

Post a Comment