கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, March 22, 2011

தமிழ்நாடு குலாலர் சமுதாய தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு


துணை முதலமைச்சரும், கழக பொருளாளருமான மு.க.ஸ்டாலினை 21.03.2011 அன்று தமிழ்நாடு குலாலர் சமுதாய தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் கே.ஜெயராமன், பொதுச் செயலாளர் க.நந்தீஸ்வரன், பொருளாளர் தீனதயாளன் ஆகியோர் சந்தித்து, 2011 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தங்களது ஆதரவினைத் தெரிவித்தனர்.

திமுகவுக்கு தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் ஆதரவு :

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பது என தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அருந்ததியர் சங்கத்தின் தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சிவகாசியில் நடந்தது. கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட தலைவர் கருப்பசாமி தலைமை வகித்தார். செயலாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். மதுரை, நெல்லை, து£த்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திமுக ஆட்சியில் அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரிப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விருதுநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், தென்மண்டல அமைப்பு செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் நாகராஜன்(மதுரை), சுருளி(தேனி), கலைவேந்தன்(திண்டுக்கல்), நாராயணன்(சிவகங்கை), பெருமாள்(நெல்லை) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment