ஜெயலலிதா ஆட்சிக்கும் வரப்போவதும் இல்லை, தங்கம் தரப்போவதும் இல்லை என மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
மதுரை மாவட்ட காங் கிரஸ் வேட்பாளர்களான மதுரை வடக்கு தொகுதி ராஜேந்திரன், தெற்கு வரதராஜன், திருப்பரங்குன்றம் சுந்தரராஜன் ஆகியோர் மத்திய அமைச்சர் மு.க.அழ கிரியை அவரது இல்லத்தில் 25.03.2011 அன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். நடிகை குஷ்பு மு.க.அழகி ரியை சந்தித்து ஆசி பெற்று பிரசாரத்தை துவக்கினார்.
பின்னர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா காரில் உட்கார்ந்து கொண்டு பேசும் போது மற்றவர்கள் எழுதிக் கொடுத்ததைத்தான் படிப்பார். அதிமுக தேர்தல் அறிக்கை, திமுக அறிக் கையை காப்பியடித்தது போல் உள்ளது. அவர் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள அறிவிப்புகளுக்கு தோல்வி பயமே காரணம்.
ஜெயலலிதா காரில் உட்கார்ந்து கொண்டு பேசும் போது மற்றவர்கள் எழுதிக் கொடுத்ததைத்தான் படிப்பார். அதிமுக தேர்தல் அறிக்கை, திமுக அறிக் கையை காப்பியடித்தது போல் உள்ளது. அவர் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள அறிவிப்புகளுக்கு தோல்வி பயமே காரணம்.
கடந்த 2006 தேர்தலில் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சொன்னதையும், சொல்லாத திட்டங்களை யும் நிறைவேற்றி சாதனை படைத்தார் என்பது மக்களுக்கு தெரியும். அதனால் தான் இப்போது திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்துள்ள அறிவிப்புகளை மக்கள் முழுமையாக நம்புகின்றனர்.
கடந்த 2001 தேர்தலில் ஜெ. ஆட்சிக்கு வந்தபோது அதற்கு முன் திமுக ஆட்சியில் செயல்படுத்திய நல்ல திட்டங்களை எல்லாம் நிறுத்தினார். குறிப்பாக திருமண நிதியுதவி திட்டத்தை 25 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாக திமுக தேர்தல் அறிக்கையில் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள் ளது. ஜெயலலிதா வந்தால் இப்போதுள்ள 25 ஆயிரத்தையும் நிறுத்தி விடுவார். கர்ப்பிணி பெண்கள் நிதியுதவி ரூ.6 ஆயிரத்தை 10 ஆயிரமாக திமுக அறிவித்துள்ளது. ஆனால் ஜெயல லிதா அறிக்கையில் 25 ஆயி ரம் கொடுப் போம் என சொல்லியிருக்கிறார். மக் களை ஏமாற்றுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார்.
முதல்வர் கருணாநிதி கதை வசனத்தில் எங்கள் தங்கம் படத்தில் ஜெயலலிதா நடித்தாரே தவிர அவருக்கு தங்கத்தை பற்றி கவலை கிடையாது. ஆட்சிக்கு வரமாட்டோம் என்ற பயத்தில் தான் அதை தருகிறேன், இதை தருகிறேன் என மக்களை ஏமாற்றுகிறார். தங்கம் தரப்போவதும் இல்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை.
இவ்வாறு மு.க.அழகிரி தெரிவித்தார்.
இவ்வாறு மு.க.அழகிரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment