
திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏப்ரல் 1ம் தேதி, மாலை 4 மணிக்கு குமரியில் தொடங்கி நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் வடிவேலு பிரசாரம் செய்கிறார். 2ம் தேதி நெல்லை மாவட்டம், 3&ம் தேதி காலை 9 மணிக்கு திருமங்கலம், திருப்பரங்குன்றம், மாலை 4 மணிக்கு அருப்புக்கோட்டை, மானாமதுரை, திருப்பத்தூர் பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார். 4ம் தேதி, மதுரை நகர், புறநகர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். 5ம் தேதி உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, மாலையில் தேனி, கம்பம், போடி, தேனி, பெரியகுளம் பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார். 6ம் தேதி, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்கிறார். 7ம் தேதி, காலையில் பள்ளபட்டி, கரூர் டவுன், அரவக்குறிச்சி, குளித்தலை, முசிறி, துறையூர், திருச்சி. மாலையில் விராலிமலை, புதுக்கோட்டை பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். 8ம் தேதி காலை கந்தர்வக்கோட்டை, தஞ்¬ச, 9ம் தேதி காலை பாபநாசம், கும்பகோணம், மாலை 4 மணிக்கு திருவிடைமருதூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர். 10ம் தேதி, கடலூர் மாவட்டம் முழுவதும். 11ம் தேதி & விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியத்தில் அவருக்கு எதிராக பிரசாரம் செய்கிறார். காங். வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
No comments:
Post a Comment