கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, March 22, 2011

மேலும் 2 பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு


திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை படிப்படியாக பாமக அறிவித்து வந்தது.

இந்நிலையில் 22.03.2011 அன்று விடுபட்ட மயிலம் மற்றும் வேதாரண்யம் தொகுதிகளுக்கான பாமக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மயிலம் தொகுதியில் இரா.பிரகாஷ், வேதாரண்யம் தொகுதியில் ந.சதாசிவம் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று பாமக அறிவித்துள்ளது.

திமுக கூட்டணிக்கு ஆதரவு அதிகரிப்பு - ராமதாஸ் :

திமுக தேர்தல் அறிக்கை வெளியான பிறகு தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வாக்கு சதவீதம் மேலும் அதிகரித்துள்ளது என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் முதல் அமைச்சராக வந்தால்தான், மக்கள் நலத்திட்ட பயன்கள் அனைத்தும், உரிய வகையில் மக்களிடம் சென்றடையும். இதற்காக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்காக கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கை வெளியான பிறகு, திமுகவுக்கான வாக்கு சதவீதம் மேலும் அதிகரித்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கை வெற்றி திருமகன். 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.


No comments:

Post a Comment