கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 20, 2011

திமுக தேர்தல் அறிக்கையை மக்கள் மனதில் பதியவையுங்கள்
சென்னை சேப்பாக்கம் & திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளராக தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் உள்ள சேப்பாக்கம்&திருவல்லிக்கேணி பகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் 20.03.2011 அன்று காலை நடந்தது.

இதில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
கருணாநிதி 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி இது. திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை மக்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டும். 2006ல் திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாக விளங்கியது. இந்த முறை, தேர்தல் அறிக்கைதான் கதாநாயகி என்று முதல்வர் கூறியுள்ளார். திமுக தந்திருக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்பதை வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து சொல்ல வேண்டும். சமுதாய வளர்ச்சிக்காக கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

சாதனையை சொன்னாலே வெற்றி நிச்சயம் - தயாநிதி மாறன் :

கூட்டத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பேசியதாவது:
தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு ஆங்கில தொலைக்காட்சி ஆய்வு செய்து, முதல்வர் கருணாநிதியின் ஆட்சி நடக்கும் தமிழகம்தான் நாட்டிலேயே தலைசிறந்த மாநிலம் என்று விருது கொடுத்திருக்கிறது. ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி, 108 ஆம்புலன்ஸ், கலைஞர் காப்பீடு என்று எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை முதல்வர் செய்துள்ளார். நல்லதை மக்கள் எளிதில் மறந்து விடுவார்கள். திமுக அரசின் சாதனைகளை நினைவூட்டினாலே வெற்றி நிச்சயம். இலவச கலர் டிவி கொடுத்து சாதித்த முதல்வர், இலவச கிரைண்டர், மிக்சி, லேப்டாப் ஆகியவற்றையும் கட்டாயம் கொடுப்பார். இதை மக்களுக்கு எடுத்து சொல்லி மீண்டும் கருணாநிதி ஆட்சியை மலர வைப்பது நமது பொறுப்பு.

கூட்டத்தில் மு.க.தமிழரசு, சேப்பாக்கம் & திருவல்லிக்கேணி பகுதி செயலாளர்கள் மதன்மோகன், ஏ.ஆர்.பி.எம். காமராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் சுரேஷ்குமார், காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஜஹாங்கீர், சதாசிவம், ஆனந்தன் மற்றும் கவுன்சிலர்கள், பகுதி, மாவட்ட பிரதிநிதிகள், தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்க தலைவர் வி.பி.மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment