கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 27, 2011

திமுக தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா காப்பி அடித்துள்ளார் - மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன்


திமுக தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா அப்படியே காப்பி அடித்துள்ளார் என மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் & திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெ.அன்பழகனை ஆதரித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன், சிந்தாதிரிப்பேட்டை 79வது வட்டத்தில் 24.03.2011 அன்று வாக்கு சேகரித்தார். மாலை 4.30 மணிக்கு நெடுஞ்செழியன் நகரில் வாக்கு சேரிக்கும் கூட்டம் தொடங்கியது.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பேசியதாவது:
திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வொரு தேர்தலின் போதும், இந்த இடத்தில் இருந்து தான் முதல் பிரசாரத்தை தொடங்குவார். நீங்கள் அவரை வாழ்த்துவீர்கள். அதனால் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றுள்ளார். நீங்கள் வாழ்த்தினால், வெற்றி நிச்சயம். எனவே உங்களது வாழ்த்துகளோடு இன்று இந்த தொகுதி வேட்பாளர் ஜெ.அன்பழகன், தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். உங்கள் வாழ்த்துகள் வாக்குகளாக மாறி, அவர் வெற்றி பெறுவார். கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை உங்கள் வீட்டுக்குள்ளேயே பார்க்கிறீர்கள்.
தேர்தல் அறிக்கையில் சொன்னபடியே, இலவச கலர் டிவி வழங்கினார். அதுபோலவே ஒரு கிலோ அரிசி ரூ.2 என அறிவித்து விட்டு, ஒரு கிலோ அரிசியை ரூ.1க்கு கொடுத்து வருகிறார். இதையெல்லாம் கொடுக்க முடியாது என்று எதிர்கட்சியினர் அன்று கூறினார்கள். ஆனால் முதல்வர் கருணாநிதி கொடுத்தார். ஏழைகளின் உயிர் காக்கும் கலைஞர் காப்பீடு திட்டத்தால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். இத்தகைய காப்பீடு திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
நீங்கள் உதவிக்கு கூப்பிட்டால் மற்றவர்கள் உதவிக்கு வர தயங்கினாலும், தயங்கலாம். ஆனால் அவசர தேவைக்காக நீங்கள் 108 ஆம்புலன்சை அழைத்தால், அவர்கள் உங்கள் இடத்தை தேடி உடனே வருவார்கள்.
சென்ற வாரம் திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசம் என்று அறிவித்துள்ளார். கிரைண்டர் அல்லது மிக்சி தர தயாராகவுள்ளார். இது தேர்தல் அறிக்கையில் சொன்னது. நாளை கிரைண்டரையும், மிக்சியையும் சேர்த்து தருவார். இல்லை, பிரிட்ஜ் வேண்டுமா? தருவார். அல்லது வாசிங் மிஷின் தான் வேண்டுமென்றாலும், அதையும் முதல்வர் தருவார். கருணாநிதி எழுதிய தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா அப்படியே படிக்கிறார். அவருக்கு வெட்கம் இல்லையா? சுயபுத்தி இல்லையா? அரசு ஊழியர்களை அதிமுக ஆட்சியில் நள்ளிரவில் கைது செய்து லத்தியால் அடித்தார்.
இவ்வாறு மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசினார்.

No comments:

Post a Comment