கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, March 29, 2011

விஜயகாந்த் பிரச்சாரத்தை ஏற்பார்களா? கனிமொழி பதில்


திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவரும் முதல் அமைச்சருமான கருணாநிதியை ஆதரித்து, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரசாரம் மேற்கொண்ட கனிமொழி எம்.பி. பேசியது:

"தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற ஒரே தலைவர் முதல்வர் தான். தி.மு.க. தேர்தல் அறிக்கை உலக அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கூட தி.மு.க. தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்கின்ற நிலையில் உள்ளன.

அ.தி.மு.க. கூட நமது அறிக்கையை பார்த்து தான் இலவச வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. இலவசங்களை கிண்டல் செய்த கம்யூனிஸ்ட் கட்சியினரே கேரள மாநிலத்தில் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று அறிவித்துள்ளனர். அரசின் சாதனை திட்டங்களால் கம்யூனிஸ்டுகளுக்கே வழிகாட்டுகின்ற தலைவராக முதல்வர் உள்ளார். மேற்கு வங்காளத்திலும் இதே நிலை தான் உள்ளது.

திருவாரூர் தொகுதியில் போட்டியிட முடியவில்லையே என்கின்ற வருத்தம் முதல்வருக்கு இருந்தது. தற்போது தனித்தொகுதியாக இருந்த திருவாரூர் பொதுத்தொகுதியாக மாறியதால் முதல்வர் தனது விருப்பத்தை நிறைவு செய்து சொந்த மண்ணில் போட்டியிடுகின்ற வாய்ப்பை பெற்றதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

திருவாரூர் தொகுதி எனது சொந்தங்கள் உள்ள பகுதி என்று அவர் கூறியிருக்கிறார். அதனால், நான் வாக்கு கேட்டு நீங்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்ற நிலை இல்லை. நிச்சயம் நீங்கள் வெற்றி பெறச்செய்வீர்கள். அவருக்கு வாக்கு சேகரிக்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு திருவாரூர் மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தொகுதியில் நமது தலைவர் போட்டியிட்டு முதல்வராக அமர்வது தொகுதிக்கே பெருமை. அதன்மூலம் தமிழகமே தலைநிமிர்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு திருவாரூர் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும். தமிழன் தலைநிமிர திமுக தலைவர் மீண்டும் முதல்வராக வேண்டும்.

தேர்தலில் சரித்திர சாதனை படைக்கின்ற வகையில், மாபெரும் வெற்றியை திருவாரூர் தொகுதி மக்கள் வழங்கிட வேண்டும்," என்றார் கனிமொழி.

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கேள்வி: விஜயகாந்த் பிரச்சாரத்தை மக்கள் ஏற்பார்களா?

பதில்: வேறு எந்த கூட்டணியும் தனக்கு தேவையில்லை. மக்களுடன்மட்டுமே கூட்டணி என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதிமுக கூட்டணிபற்றி ஒருமுறை கேட்டபோது, எனக்கு நிழலுக்கு மாலையிட விருப்பமில்லை என்று சொன்னார். அப்படியெல்லாம் பேசிவிட்டு இன்று அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை.


அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டு பஞ்சமி நிலங்களை மீட்கப்போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறிவருவது வேடிக்கையானது .

No comments:

Post a Comment