கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, March 29, 2011

ஜெ. தேர்தல் அறிக்கையை நம்பாதீர்கள்: குஷ்பு



ஜெயலலிதாவின். தேர்தல் அறிக்கையை நம்பாதீர்கள் என்று பழனியில் நடிகை குஷ்பு பேசினார்.

பழனி சட்டமன்றத்தொகுதியில் நடிகை குஷ்பு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது;

தி.மு.க. தேர்தல் அறிக்கையை கதாநாயகி தேர்தல் அறிக்கை என்று கூறுகிறோம். ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையை நம்பாதீர்கள். அவர் தி.மு.க. தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளார்.

பெண்களுக்கு நிறைய திட்டங்கள் கொண்டு வந்தவர் கலைஞர். 1989ம் ஆண்டு பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி சுயமரியாதை தந்தவர். அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக சத்துணவில் வாரம் 5 முட்டை வழங்கினார்.

இலவச மிக்சி, கிரைண்டர் தருவதாக கலைஞர் தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்பவர் கலைஞர். துணை முதல் அமைச்சர் கூறியது போல குளிர் சாதன பெட்டியும், வாஷிங் மெஷினும் தேடி வரும் என்றார்.

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் - நடிகை குஷ்பு பேச்சு :

திருப்பூர் மாவட் டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான சாமிநாதனை ஆதரித்து, நடிகை குஷ்பு 28.03.2011 அன்று மடத்துகுளத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மடத்துகுளம் ஒன்றியம் கொழுமம், குமரலிங்கம், சாமராயபட்டி, பெருமாள்புதூர், குறிச்சி கோட்டை, தளி, பள்ளபாளையம், போடிபட்டி, உடுமலை மத்திய பஸ்நிலையம், குடிமங்கலம் நால் ரோடு ஆகிய பகுதிகளில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, குஷ்பு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
போடிபட்டி பகுதியில் பிரசாரம் செய்த நடிகை குஷ்பு பேசியதாவது:
கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் திமுக அரசு இந்தியாவிலேயே நம்பர் ஒன்னாக திகழ்ந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி, கடந்த தேர்தலின் போது அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் இலவச டிவி மற்றும் கேஸ் அடுப்புகளை வழங்கி உள்ளார்.
நன்றாக படிக்கும் மாணவர்கள்தான் எப்போதும் நம்பர் ஒன்னாக இருப்பார்கள். கருணாநிதியின் தேர்தல் அறிக்கைதான் நம்பர் ஒன். அதைப் பார்த்து ஜெயலலிதாக காப்பி அடித்துள்ளார். காப்பி அடிக்கும் மாணவர்கள் மூன்றாண்டுக்கு தேர்வு எழுத முடியாது. அதுபோல அடுத்த 5 ஆண்டுக்கு ஜெயலலிதா ஆட்சிக்கு வரமுடியாது. சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். 6வது முறையாக கருணாநிதி, முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்வார்.
இவ்வாறு குஷ்பு பேசினார்.
தொடர்ந்து, குஷ்பு உடுமலை சட்டமன்ற தொகுதி கொமுக வேட்பாளர் இளம்பரிதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
நடிகை குஷ்புவை காணவும், அவரது பேச்சை கேட்கவும் சாலையின் இருபுறமும் ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் நின்றிருந்தனர். பள்ளி மாணவிகள் பலரும், குஷ்புவுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

உடுமலை கொமுக வேட்பாளர் இளம்பரிதி, திருப்பூர் தெற்கு காங்கிரஸ் வேட்பாளர் செந்தில்குமார், திருப்பூர் வடக்கு திமுக வேட்பாளர் கோவிந்தசாமி, பல்லடம் கொமுக வேட்பாளர் பாலசுப்பிரமணி ஆகியோரை ஆதரித்து குஷ்பு பிரசாரம் செய்தார்.

No comments:

Post a Comment