நல்லாட்சி தொடர திமுக கூட்டணியை ஆதரியுங்கள்’ என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 24.03.2011 அன்று மாலை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை காந்தி சிலை அருகே திமுக வேட்பாளர் கவிதைப்பித்தனை ஆதரித்து பிரசாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியது:
ஆறாவது முறையாக திமுக ஆட்சி அமைய வேண்டும் என்ற நல்ல உள்ளத்தோடு உங்களை நாடி, உரிமையோடு, உணர்வோடு, பாசப்பிணைப்போடு வந்து வாக்கு கேட்கிறோம். சிலர் தேர்தல் நேரத்தில் மட்டுமே வந்து வாக்குகளை கேட்டுவிட்டு பின்பு கோடநாட்டுக்கு சென்றுவிடுவார்கள்.
கடந்த ஆட்சியில் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா நிறுத்தினார். அந்த திட்டங்களை எல்லாம் மீண்டும் முதல்வராக வந்து கருணாநிதி நிறைவேற்றினார். திருமண உதவி தொகை ^25 ஆயிரமாக உயர்த்தப்பட்டு அந்த தொகை தற்போது 6வது முறையாக ஆட்சிக்கு வரும் போது ^30 ஆயிரமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இன்றைக்கு தி.மு.க தேர்தல் அறிக்கையில் கிரைண்டர், மிக்ஸி இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் தாண்டி வாசிங் மிஷின், பிரிட்ஜ் வழங்குவார் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எண்ணமும் ஈடேரும்.
மகப்பேறு விடுப்பு 4 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமகன்களுக்கு உள்ளுர் பஸ்களில் இலவச பயணம், அதையும் திருவாரூர் பொதுக்கூட்டத்தில் பேசும் போது 58 வயது முடிந்தாலே அவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு 2 சீருடை வழங்கப்பட்டு வருகிறது. அது 3 சீருடையாக வழங்கப்படும்.
முதியோர்களுக்கு மாதந்தோரும் ^500 வழங்கப்படுவது. அது ^750 ஆக உயர்த்தப்படும். 6 வது முறையாக திமுக ஆட்சி தொடர வேண்டும். எனவே இந்த நல்லாட்சி தொடர ஆதரியுங்கள்.
இவ்வாறு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இவ்வாறு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment