கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 27, 2011

ஜெயலலிதாவுக்கு குஷ்பு சவால்


26.03.2011 அன்று தேனி நேரு சிலை அருகில் பெரியகுளம் தொகுதி திமுக வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து குஷ்பு பேசியதாவது:
தமிழக முதல்வர் 87 வயதிலும் தமிழ் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அதிமுக வுக்கு துணையாக இருந்த வைகோவை ஜெயலலிதா வெளியேற்றி விட்டார்.
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை அப் படியே காப்பி அடித்து ஜெயலலிதா தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ ருக்கு சொந்த புத்தியும் கிடையாது. சொல்புத்தியும் கிடையாது. ஏழைகளுக்காக தான் வாழ்ந்த வீட்டை தான மாக எழுதிக் கொடுத்தவர் கருணாநிதி. அரண்மனைப் போல உள்ள தனது வீட்டை ஏழைகளுக்காக மருத்துவமனை நடத்தவோ, முதி யோர் இல்லம் நடத்த வோ ஜெயலலிதா கொடுக்க முன்வருவாரா? நான் சவால் விடுகிறேன் என பேசினார்.

பொய்யான வாக்குறுதிகள் அளித்து ஜெயலலிதா மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்! - குஷ்பு :

பொய்யான வாக்குறுதிகள் அளித்து ஜெயலலிதா தமிழக மக்களை ஏமாற்றப்பார்க்கிறார்’ என்று நடிகை குஷ்பு கூறினார்.
தேனி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு பிரசாரம் செய்து வருகிறார். கம்பம் தொகுதி திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணனை ஆதரித்து உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி, கம்பம் பகுதிகளில் அவர் வாக்குச் சேகரித்தார். கம்பம் பகுதியில் அவர் பேசியதாவது:
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தேனி மாவட்ட மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். தேனி மாவட்ட மக்களும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஜெயலலிதா பொய்யான தேர்தல் அறிக்கைகளை கொடுத்து உங்களை ஏமாற்றுகிறார். நீங்கள் ஏமாந்து விடக்கூடாது.
ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த நோயாளிகள் வசதிக்காக முதல்வர் கருணாநிதி 108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டு வந்தார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், அதை ரத்து செய்து விடுவார். நீங்கள் ஆட்டோ பிடித்துத்தான் ஆஸ்பத்திரிக்குச் செல்லவேண்டும். அப்பாவி மக்கள் உடல் நலன் காப்பதற்காக, உயிர்காக்கும் மருத்துவக்காப்பீடு திட்டத்தை முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆஸ்பத்திரியில் பணம் பிடுங்கும் திட்டம்தான் கொண்டு வருவார்.
வீடு இல்லாத ஏழை மக்களுக்கு கான்க்ரீட் வீடு கட்டிக் கொடுத்துள்ளார் முதல்வர் கருணாநிதி. திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பியடித்து ஜெயலலிதா மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். நீங்களும், உங்கள் குடும்பத்தி உள்ள அனைவரும் நன்றாக இருக்கவேண்டுமானால், கருணாநிதி ஆறாவது முறையாக முதல்வராகவேண்டும்.
இவ்வாறு குஷ்பு பேசினார்.
பிரசாரத்தின்போது கம்பம் ஒன்றிய திமுக செயலாளர் குரு இளங்கோ, நகரச் செயலாளர் ஈஸ்வரன் உள்பட பலர் உடன் சென்றனர்.

No comments:

Post a Comment