கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, March 28, 2011

திமுகவினருக்கு கலைஞர் வேண்டுகோள்


அதிகாரபூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்த தி.மு.க.வினர் போட்டியில் இருந்து விலகும்படி, முதல் அமைச்சர் கருணாநிதி உருக்கமான வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.


இதுகுறித்து முதல் அமைச்சர் கருணாநிதி 27.03.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:


தலைவர் தந்தை பெரியார், திராவிட முன்னேற்றக்கழக அரசுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் மிக முக்கியமான ஒன்றைக் கோடிட்டுக்காட்டிச் சொன்னார். "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது தி.மு.க.வின் முழக்கமாக இருக்கிறது.


என்னைப் பொறுத்தவரையில் கடமையிலும், கண்ணியத்திலும் கழகம் கடைப்பிடிக்க வேண்டிய உறுதியை விட; கட்டுப்பாட்டில்தான் அதிக உறுதியைக் கடைப்பிடிக்க வேண்டும்; கடமை தவறினாலும், கண்ணியம் தவறினாலும், கழகத்துக்கு சிறிதளவு சேதாரம்தான் ஏற்படும்; கட்டுப்பாடு தவறினால் கழகம் முழுமையாக சேதமுற்றுவிடும்.


எனவே, எப்பாடுபட்டாவது கட்டுப்பாட்டைக் காப்பாற்றுங்கள்'' என்று உறுதிபடச் சொல்வார்.


கண் கலங்குகிறேன்


இந்த தேர்தலில் ஓரிரு இடங்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், கழகத்தின் மீது சேற்றை வாரி இறைப்பதைப் போல் இத்தனை ஆண்டு காலமாக தன்னை வளர்த்து சமுதாயத்துக்கு அடையாளம் காட்டிய கழகத்தின் கழுத்தையே அறுப்பதைப்போல்; பதவிப் பொறுப்பு கிட்டவில்லை என்றதும் கழகக் கட்டுப்பாட்டை துச்சமெனக் கருதி சுயேச்சைகளாகவோ அல்லது விலகி நின்றோ தேர்தலில் போட்டியிடும் கழகத்தினர் சிலரின் போக்கு கண்டு கண்கலங்குகின்றேன்.


விலகிக்கொள்ள வேண்டும்

இவர்களா இப்படி?'' என்று மனம் நொந்து போகின்றேன். என்பால் இதுவரை காட்டிய அன்பும், கழகத்தின் மீது கொண்டிருந்த பற்றும் பாசமும் போலியானவையல்ல, உண்மையானதுதான் என்பதை நிரூபிக்க, அந்த உடன்பிறப்புகளுக்கு ஒரே வழிதான் உண்டு. அவர்கள் உடனடியாக அதிகாரபூர்வமற்ற போட்டியிலிருந்து விலகிக் கொண்டு கழகத்தின் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் காத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.

No comments:

Post a Comment