
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக நடிகர் பாக்கியராஜ் பேசிய திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ்,
நல்ல விஷயத்தை யாரும் சொல்ல வேண்டியது, இல்லை. அது தானாகவே விளம்பரமாகிவிடும். அதேபோல் தான் கலைஞர் அறிவித்த 108 ஆம்புலன்ஸ் திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பூவின் வாசம் காற்றடிக்கும் திசையை நோக்க வீசும். எதிர் திசையில் வீசாது. ஆனால் ஒரே ஒரு பூவின் வாசம் மட்டும் நான்கு திசைகளிலும் வீசும். அது தான் மனிதனின் நற்பண்பு. அந்த பண்பு கலைஞரிடம் உள்ளது. விஜயகாந்த், கட்சி தொடங்கும் போது, தான் மக்களிடமும், ஆண்டவனிடம் மட்டும் தான் கூட்டணி வைத்துக் கொள்வேன் என்று கூறினார். ஆனால் இப்போது மக்கள் கூட்டணியும் இல்லை, ஆண்டவன் கூட்டணியும் இல்லை. அவரை கடுமையாக விமர்சனம் செய்த ஜெயலலிதாவிடம் கூட்டணி வைத்து உள்ளார். இன்று தேசிய ஒற்றுமைக்கும், ஒருமை பாட்டுக்கும் கலைஞர் கொடுத்த சமத்துவபுரம் உதாரணமாக திகழ்கிறது. தி.மு.க. அறிவித்த தேர்தல் அறிக்கையை வேறு வழியின்றி, காப்பிஅடித்து அப்படியே செல்லி இருக்கிறார், ஜெயலலிதா. இப்போது கலைஞர் வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கை மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்து உள்ளனர். அவரின் திட்டங்கள் எந்தளவு மக்களை சென்றடையும் என்று மக்களுக்கு தெரியும் என்றார்.
No comments:
Post a Comment