தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களை கட்டத் தொடங்கியுள்ளது. திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் கருணாநிதி, 24.03.2011 அன்று காலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். மனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இன்று ஏராளமான வேட்பாளர்கள் மனு செய்தனர்.
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 13&ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19&ம் தேதி தொடங்கியது. மனு தாக்கலுக்கு 26.03.2011 அன்று கடைசி நாளாகும். முதல்வர் கருணாநிதி, முதல்முறையாக தனது சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிடுகிறார். சென்னையில் இருந்து 23.03.2011 அன்று காலை வேனில் புறப்பட்டு திருவாரூர் சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 23.03.2011 அன்று மாலை திருவாரூரில் நடந்த தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசினார். கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
பயணியர் விடுதியில் 23.03.2011 அன்று இரவு தங்கியிருந்த முதல்வர் கருணாநிதி, 24.03.2011 அன்று காலை திருவாரூரை அடுத்த காட்டூரில் உள்ள தனது தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்கு சென்றார். நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து தஞ்சை & திருவாரூர் ரோட்டில் உள்ள தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தார். தேர்தல் உதவி அதிகாரி ஜெயராஜிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். மனுவுடன் டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரத்தையும் செலுத்தினார். பின்னர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு படிவத்தில் கையெழுத்திட்டார். மனு தாக்கலின்போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு எம்.பி., எல்.கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
முதல்வர் மனு தாக்கல் செய்ய சென்ற வழி நெடுகிலும் மக்கள் திரண்டிருந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வர் கருணாநிதி சொத்து விவரம்
திருவாரூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த முதலமைச்சர் கருணாநிதியின் சொத்து விவரம் :
முதல்-அமைச்சர் கருணாநிதி தாக்கல் செய்த சொத்து விவர பட்டியலில் அசையும் சொத்துக்கள் ரூ.4 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 855 என்றும் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும்,
வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனையவற்றில் இருந்து பெறப்பட்ட கடன்கள் ரூ.10 லட்சம் என்றும் கையில் உள்ள ரொக்கம் ரூ.15 ஆயிரம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மனைவி தயாளு அம்மாள் பெயரில் கையிலுள்ள ரொக்கம் ரூ.30 ஆயிரம் என்றும், அசையும் சொத்தின் மதிப்பு ரூ.15 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 363 என்றும் அசையா சொத்தின் மதிப்பு ரூ.5 லட்சத்து 51 ஆயிரம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
துணைவியார் ராசாத்தி அம்மாள் பெயரில் கையில் உள்ள ரொக்கம் ரூ.2 லட்சம் என்றும், அசையும் சொத்து ரூ.20 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 924 என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628 என்றும், வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனையவற்றில் இருந்து பெறப்பட்ட கடன்கள் ரூ.1 கோடியே 1 லட்சத்து 76 ஆயிரத்து 503 என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்புகள் எல்லாம் மக்களிடம் எடுபடாது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
திருவாரூர் தொகுதியில் முதல்வர் கருணாநிதி, 24.03.2011 அன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். மனு செய்துவிட்டு வெளியே வந்த அவரிடம் நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது முதல்வர் அளித்த பேட்டி:
தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளீர்களே, மக்கள் வரவேற்பு எப்படி உள்ளது?
அது உங்களுக்கே தெரியும்.
ரேஷனில் 20 கிலோ இலவச அரிசி உள்பட பல அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா வெளியிட் டுள்ளாரே?
இது எல்லாம் மக்களிடம் எடுபடாது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றவவே?
நீங்கள்தான் அதை பெரிதுபடுத்துகிறீர்கள்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
அ.தி.மு.க தேர்தல் அறிக்கை - மு.க.ஸ்டாலின் கருத்து :
அ.தி.மு.க தேர்தல் அறிக்கை - மு.க.ஸ்டாலின் கருத்து :
பின்னர், அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “ஜெயலலிதாவின் பேச்சை மக்கள் நம்ப மாட்டார்கள். ஏற்கனவே, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங்களை ரத்து செய்தவர்தான் அவர்” என்றார்.
திருவாரூர் வர்த்தகர் சங்கத்தினர் முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவு :
திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் கருணாநிதியை வர்த்தகர் சங்கத்தினர் 24.03.2011 அன்று சந்தித்து கட்சி பாகுபாடின்றி ஆதரவு அளிப்போம் என்று உறுதி அளித்தனர்.
முதல்வர் கருணாநிதி முதல்முறையாக தனது சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால், மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 23.03.2011 அன்று இரவு திருவாரூரில் நடந்த பிரசார தொடக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். 23.03.2011 அன்று காலை, முதல்வர் கருணாநிதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக, பயணியர் விடுதியில் தங்கியிருந்த முதல்வரை திருவாரூர் நகரில் உள்ள அனைத்து வர்த்தகர் சங்கத்தின் நிர்வாகிகள் நந்தகோபால், சக்தி செல்வகணபதி, அருள், மோகன் மற்றும் நகர பிரமுகர்கள் உள்பட 100&க்கும் அதிகமானோர் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மண்ணின் மைந்தரான முதல்வரை வெற்றி பெற வைக்க அனைவரும் கட்சி பாகுபாடின்றி ஆதரவளிப்போம் என்று அவர்கள் உறுதி அளித்தனர்.
No comments:
Post a Comment