கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, March 29, 2011

நள்ளிரவில் வீடு புகுந்து மிரட்டிய சம்பவம் : மதுரை எஸ்.பி., போலீசார் மீது நடவடிக்கை கோரி திமுக ஒன்றிய செயலர் மனைவி டிஐஜியிடம் புகார்


நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களை மிரட்டிய சம்பவம் தொடர்பாக மதுரை எஸ்.பி., போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக ஒன்றிய செயலாளர் மனைவி டிஐஜியிடம் கண்ணீருடன் புகார் கொடுத்தார்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் ராஜேந்திரன் மனைவி ரூபஜெயந்தி. டிஐஜி சந்தீப் மிட்டலை 29.03.2011 அன்று காலை சந்தித்து கண்ணீர் மல்க புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:

நாங்கள் மதுரை சர்வேயர் காலனியில் குடியிருக்கி றோம். எனது கணவர், மேலூர் தொகுதியில் திமுகவிற்காக தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். 28.03.2011 அன்று நள்ளிரவு ஒரு மணியளவில் எனது வீட்டின் கதவு தட்டப்பட்டது. ஜன்னல் வழியாக நான் யாரென பார்த்தேன். வெளியே வெள்ளை நிற வேன், சுமோ கார், போலீஸ் வேன் ஆகியன நின்றன.
அதிலிருந்து இறங்கிய 10 பேர் எனது வீட்டைச் சுற்றி நின்றனர். வீட்டின் கதவை ஆறு பேர் பலமாக தட்டினார். கதவை நான் திறப்பதற்குள் அதிவேக மாக உள்ளே நுழைந்தனர். அவர்கள் யாரென்று கேட்டேன். அப்போது என்னையும், என் தாயா ரையும் கழுத்து, மார்பு பகுதியில் முரட்டுத் தனமாக தள்ளியவாறு தகாத வார்த்தைகளால் திட்டி எனது கணவர் எங்கே எனக்கேட்டனர். பின்னர் வீட்டில் இருந்த பொருட்கள், பாத்திரங் களை சேதப்படுத்தினர்.
என் கணவர் வீட்டில் இல்லை. தேர்தல் பணிக்கு சென்றிருக்கிறார் என்றேன். அப்போது அவர்கள், எஸ்பி அஸ்ரா கார்க் அனுப்பியதால் வந்துள்ள தாக கூறி, எஸ்.பி., பங்களா விற்கு வருமாறு என்னை அழைத்தனர். சோதனை யில் வீட்டில் எதுவுமில்லை என தெரிந்ததும், நீ வா என இரண்டு பேர் எனது கையை பிடித்து இழுத்த னர். தடுக்க முயன்ற என் தாயாரையும் தள்ளிவிட்ட னர். அவர்களது செயல் எங்களுக்கு மானக்கேடாக இருந்தது. நாங்கள் கதறி அழுதோம். உன் கணவரை சரணடையச்சொல். இல்லாவிட்டால் எஸ்பி சூட்டிங் ஆர்டர் கொடுத்து விடுவார் என மிரட்டினர். எனது கணவர் உயிருக்கும், எங்கள் மானத்திற்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

எங்கள் வீட்டை சோதனையிட வந்தபோது பெண் போலீசார் இல்லை. இதற்காக எஸ்பி அஸ்ராகார்க் மீதும், அவர் அனுப்பியதாக வந்தவர்கள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் ரூப ஜெயந்தி அழுதவாறே நிருபர்களி டம் கூறுகையில், ‘நள்ளி ரவில் பெண் போலீசார் இல்லாமல் வந்து என்னை யும், என் குடும்பத்தாரையும் அவமதித்து விட்டனர். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் கொட்டாம் பட்டி ஒன்றியத்தில் திமுகவிற்கு அதிக வாக்கு கள் கிடைத்தது. இந்த தேர்தலிலும் திமுகவிற்கு அதிக வாக்குகள் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக எனது கணவருடைய தேர்தல் பணியை முடக்கப் பார்க்கின்றனர். அதிமுகவிற்கு ஆதரவாக அவர்கள் தூண்டுதலின் பேரில் எஸ்பி எங்களை துன்புறுத்துகிறார்’ என்றார்.
ரூப ஜெயந்தியுடன் வந்த வக்கீல்கள் லதா சாந்தி, புனிதவல்லி ஆகியோர் கூறுகையில், ‘புகாரின் பேரில் டிஐஜி நடவடிக்கை எடுப்பாரென நம்புகிறோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் மனித உரிமை கமிஷன் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்’ என்றனர்.

வீட்டில் புகுந்து சோதனை - போலீசார் கைது மிரட்டல் :

மதுரை சர்க்கியூட் ஹவுசில் தேர்தல் பார்வையாளர் அஞ்சலி பாவ்ராவிடம், சக்கிமங்கலத்தை சேர்ந்த தைப்பூசம் என்பவர் அளித்த மனுவில், ``நானும், மனைவி ஒச்சம்மாவும் பார்வையற்றவர்கள். எனது வீட்டில் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக, அ.தி.மு.க.வினர் கூறிய புகாரின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் எதுவும் இல்லை. பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை.’’ என தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் பார்வையாளரிடம், மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் மூர்த்தி புகார் மனு கொடுத் தார். அவர் கூறுகையில், “பொய் புகாரின்பேரில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வீடு, பார்வையற்றவர் வீடு என பல்வேறு வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி, தி.மு.க.வின் தேர்தல் பணிக்கு பாதிப்பை உண்டாக்க நினைக்கிறார்கள். மதுரை கிழக்கு தொகுதியில் வெளியூர் ஆட்கள் குவிந்து, ஒரு ஓட்டலில் தங்கி உள்ளனர். அது குறித்து புகார் கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. `போலீசார் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்’ என தேர்தல் பார்வையாளரிடம் தெரிவித்தோம்“ என்றார்.


No comments:

Post a Comment