தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக, அகில இந்திய மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இந்திய மீனவர் சங்க பொதுச்செயலாளர் கடலார், மீனவர் மாமன்ற தலைவர் ஆர்.எம்.பி.ராஜேந்திர நாட்டார், கே.பி.சொக்கலிங்கம் ஆகியோர், கூட்டாக நேற்று அளித்த பேட்டி:
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மீனவர்கள் பல்வேறு நன்மைகளை பெற்றுள்ளனர். உதாரணமாக, மீனவர் நலவாரியம் அமைக்கப்பட்டது, மீனவர்களுக்கு மானிய விலையில் படகு இன்ஜின் வழங்கியது, மீனவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தது என்று நீண்ட பட்டியல் போடலாம்.
அதே நேரத்தில், தமிழகத்தில் 50 லட்சம் மீனவர்கள் இருந்தும் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் உரிய பிரதிநிதிகள் இல்லை. நீர், கடல்தொழில் சம்பந்தமான வேலைகளில் மீனவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்பது உள்ளிட்ட சில நிலைகள் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
எனினும், இரண்டு விஷயங்களையும் சீர்தூக்கி பார்க்கும்போது, மாநிலத்தில் திமுகவும், மத்தியில் காங்கிரசும் மனம் வைத்தால்தான் இப்பிரச்சினைகளை தீர்க்க முடியுமென திடமாக நம்புகிறோம். இந்த நம்பிக்கையோடு சட்டப்பேரவை தேர்தலில், திமுக கூட்டணியை முழுமனதோடு ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினர்.
திமுகவுக்கு துப்புரவுப் பணியாளர்கள் ஆதரவு :
சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பது என தமிழ் மாநில டாக்டர் அம்பேத்கர் சேகுவேரா கட்டுமான துப்புரவு அமைப்புசாரா அனைத்துத் தொழிலாளர் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
திமுகவுக்கு துப்புரவுப் பணியாளர்கள் ஆதரவு :
சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பது என தமிழ் மாநில டாக்டர் அம்பேத்கர் சேகுவேரா கட்டுமான துப்புரவு அமைப்புசாரா அனைத்துத் தொழிலாளர் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்க மாநிலத் தலைவர் ஏ.கே.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஓய்வூதியம் ரூ.400 லிருந்து 500 ஆக உயர்த்தியும், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தொழில் பயிலக மையம் வழங்கியதற்கும், தொழிலாளர்களுக்கு வாரிய உதவித் தொகை வழங்கியதற்கும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment