முதல்வர் கருணாநிதியின் தேர்தல் அறிக்கையை ஜெய லலிதா ஜெராக்ஸ் காப்பி எடுத்து தன்னுடைய தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார் என்று துணை தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கண்டனி, சிவகங்கை, ஒக்கூர், மதகுபட்டி ஆகிய பகுதிகளில் காங். வேட்பாளர் ராஜசேகரனை ஆதரித்து 25.03.2011 அன்று ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தலுக்காக மட்டும் நாங்கள் வருவதில்லை. எப் போதும் உங்களுடன் இருப்பவர்கள். அந்த உரிமையோடுதான் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகால ஆட் சியில் ஏராளமான திட்டங்கள், பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சிவகங்கை யை பொறுத்தவரை பாதாள சாக் கடை திட்டம், ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த தேர்தலின் போது கருணாநிதி வெளி யிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ளீ2க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டிவி போன்ற திட்டங் களை நிறைவேற்ற முடியாது என ஜெயலலிதா விமர்சித்தார்.
ஆனால் அந்த அறிக்கை யை 100 சதவீதம் முழுமையாக நிறைவேற்றி இருக்கிறோம். மேலும் சொல் லாத உறுதிமொழி யான கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம் ஆகியவற்றையும் நிறைவேற்றியுள்ளோம். கலை ஞர் வீடு வழங்கும் திட்டத்தில் தமி ழகம் முழுவதும் 21 லட்சம் குடிசைவீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 18 லட்சம் பேருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கும் விரைவில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். கலைஞர் ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் பெண்கள் திருமண உதவித் தொகையை உயர்த்தி வந்தார். ஆனால் திருமணத் தை பிடிக்காத காரணத்தால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோதெல் லாம் அதை நிறுத்தினார்.
இந்த தேர்தலுக்கான அறிக்கையை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். அந்த அறிக்கையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலவசமாக கிரைண்டர், மிக்சி, திருமண உதவித் தொகை யாக ளீ30 ஆயிரம், முதியோர் ஓய்வூதியமாக மாதந்தோறும் ளீ750, முதியோர்களுக்கு இலவச பஸ்பாஸ், கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ளீ2 லட்சம் மான்யத்தில் ளீ4 லட்சம் கடன் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போல் ஜெயலலிதாவும் கருணாநிதியின் தேர்தல் அறிக் கையை ஜெராக்ஸ் காப்பி எடுத்து தேர்தல் அறிக்கை யாக வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என தெரிவித்துள்ளார். கடந்த ஜெயலலிதா ஆட்சியின்போது, அரசு ஊழியர்களுக்கு அவர் செய் யாத கொடுமைகள் இல்லை. ஒரு கையெழுத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்களை வீட் டிற்கு அனுப்பினார். எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்களால் அரசு ஊழியர் களை உரிமைகளை பறித்தார். இதையெல்லாமல் அரசு ஊழியர்கள் மறந்திருப்பார் கள் என்று எண்ணி, அவர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கருணாநிதி 6வது முறையாக முதல்வராக நீங் கள் ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment