கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, March 19, 2011

நகராட்சி நிர்வாகத்துறை மூலம் ஏராளமான குடிநீர் திட்டங்கள் - கருணாநிதி பெருமிதம்


நகராட்சி நிர்வாகத் துறை மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான குடிநீர் திட்டங்கள், குடிநீர் இணைப்புகள், பூங்காக்கள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 18.03.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை தொற்று நோய் மருத்துவ மனைக்குப் புதிய கட்டடம் ரூ.18 கோடி செலவில் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு கட்டுமானப் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டு உலகம் எங்கும் உள்ள மக்கள், சான்றிதழ்களை இலவசமாக எடுக்கும் வகையில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 17,13,130 பொது மக்கள் பயன் பெற்றுள்ளனர்.
இந்தியாவிலேயே முதன்முறையாக, இறந்தோரின் அனைத்து அடக்க செலவினங் களையும் (வீடு முதல் மயான பூமி வரை) முபமையாக சென்னை மாநகராட்சியே ஏற்றுக் கொண்டுள்ளது. (குளிரூட்டும் பெட்டி, அமரர் ஊர்தி, எரித்தல், புதைத்தல்) இதற்காக ஆண்டிற்கு ஸீ1.5 கோடி செலவிடப்படுகிறது.
100 ஆண்டு பழமை வாய்ந்த பெரம்பூர் இறைச்சிக் கூடம் 48 கோடி ரூபாய்ச் செலவில் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கோடி ரூபாய்ச் செலவில் வில்லிவாக்கம், சைதாப்பேட்டை இறைச்சிக் கூடங்கள் நவீனப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
மாணவ மாணவியர்க்குப் பள்ளி களில் பயின்று வரும் காலங்களில் மனதளவிலும், உடலளவிலும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில், அவர்களின் உடல் ஆரோக்கியம் காத்திட விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குச் சீருடை, பரிசுத் தொகை, மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் மாணவ மாணவியருக்கு இலவசப் பல் பரிசோதனை, முழு உடல் பரிசோதனை, சீருடை மற்றும் காலணி வழங்குதல் போன்ற பணிகள் நடைமுறைபடுத்தப்படுகின்றன.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, 8 ஏக்கர் பரப்பில் 20 கோடி ரூபாய்ச் செலவில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டு மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. சென்னை மாநகரை எழிலூட்டி சிங்காரச் சென்னையாக மேம்படுத்தும் முயற்சியில் பூங்கா மேம்பாட்டுப் பணிகள் 45 கோடியே 28 இலட்சம் ரூபாய்ச் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. பனகல் பூங்கா, டாக்டர் நடேசன் பூங்கா, திரு.வி.க பூங்கா, டாக்டர். விஸ்வேஸ்வரய்யா கோபுரப் பூங்கா ஆகியவை பல்வேறு நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோல் இராஜாஜி சாலைப் பூங்கா, ஜெய் நகர் பூங்கா, அசோக் நகர் முதல் அவின்யூ பூங்கா, நெசப்பாக்கம் பூங்கா, காந்தி இர்வின் சாலை பூங்கா ஆகியவை புதிதாக உருவாக் கப்பட்ட பூங்காக்களில் குறிப்பிடத்தக்கவை யாகும்.
மெரினா கடற்கரையில் 3.1 கி.மீ நீளமுள்ள கடற்கரைப் பகுதி அமர்விடம், நீரூற்றுகள், நடைபாதைகள் ஆகியவை உள்ளடக்கிய பசுமையான புல்வெளித் தளங்களாக ஸீ17.00 கோடி செலவில் அழகுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு, சுற்றுச் சூழல் பூங்கா உருவாக்கும் நோக்கத்துடன், 11.10.2006 அன்று அடையாறு பூங்கா அறக்கட்டளை அமைத்தது. தற்போது, அது சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை எனப் பெயரிடப்பட்டுள்ளது. 58 ஏக்கர் பரப்பளவு கொண்ட அடையாறு சிற்றோடை நிலப்பகுதியும் இப்பணிக்காக ஒப்படைக்கப்பட்டு ஏறத்தாழ 22.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பூங்கா உருவாக்கப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில், செம்மொழிப் பூங்கா என்னும் பெயரில் தாவர மரபணு வங்கி மற்றும் அது தொடர்பான ஆய்வு மையம் ஆகியவைகளைக் கொண்ட ஒரு உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா ஒன்றினை அமைப்பதற்கு 26.3.2010 அன்று ஒப்புதல் அளித்தது.
சென்னையைச் சுற்றியுள்ள நீர் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், போரூர், செம்பரம்பாக்கம், கிணற்றுத் தளங்களிலுள்ள நிலத்தடிநீர் ஆதாரங்கள் (மீஞ்சூர், பஞ்செட்டி, தாமரைப்பாக்கம், பூண்டி, கொசத்தலையாற்றுப் படுகை, கன்னிகைப்பேர் மற்றும் தென் கடற்கரை நிலநீர் தாங்கி), கடலு£ர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, நெய்வேலி நிலநீர்ப் படுகை, கிருஷ்ணா நதிநீர்த் திட்டத்தின்கீழ் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கண்டலேறு ஏரி ஆகியவை சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களாகும்.
கிருஷ்ணா குடிநீர் திட்டத்தின்கீழ், ஆந்திரப்பிரதேசத்திலுள்ள கண்டலேறு நீர்த் தேக்கத்திலிருந்து பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்ப் பெறப்படுகிறது. பூண்டி நீர்த் தேக்கத்திலிருந்து, இணைப்புக் கால்வாய்கள் வழியாகப் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர் அனுப்பப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பின்னர், சென்னைப் பெரு நகருக்கு விநியோகிக்கப்படுகிறது.
கிருஷ்ணா குடிநீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் கிருஷ்ணா நீரைச் சுத்திகரிக்க, சென்னை நகருக்கு அருகிலுள்ள செம்பரம் பாக்கத்தில் 296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியாவின் இரண்டாவது பெரிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையமாக நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையம் மற்றும் நீர் கொண்டு செல்லும் குழாய்கள் அமைப்பதற்கு 1996ஆம் ஆண்டு தமிழக அரசால் அனுமதி அளிக்கப்பட்டு, 19.7.2007 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையத்திலிருந்து தற்பொழுது நாளொன்றுக்கு சுமார் 260 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னை நகருக்கு வழங்கப்பட்டு வருகிறது. சென்னைக் குடிநீர் வாரியம் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் வடிவமைத்து, சொந்தமாக நிறுவி, இயக்கி, திருப்பி ஒப்படைக்கும் அடிப்படையில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை அமைத்துள்ளது. இந்நிலையம் 25.7.2010 முதல் வர்த்தக ரீதியில் செயலாக்கத்தைத் தொடங்கியது. 31.7.2010 அன்று இத்திட்டம் சென்னை மாநகர மக்களுக்குப் பயன்படும் வகையில் இந்நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு ஏறத்தாழ 100 மில்லியன் லிட்டர் குடிநீர் மணலி, மாதவரம், புழல் நீரேற்று நிலையங்கள் மூலம் சென்னை நகர மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் நெம்மேலி என்ற இடத்தில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம்
வளர்ந்து வரும் சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையைச் சமாளிக்க, நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மேலும் ஒரு கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நெம்மேலியில் ஸீ1033.68 கோடி செலவில் அமைக்கப்பட துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் 23.2.2010 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 2011 டிசம்பரில் முடிவடையும்.
நலிவடைந்த பிரிவினரும் எளிதில் குடிநீர் இணைப்பு பெற தற்போது 500 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு ரூபாய் 100 மட்டுமே இணைப்புக் கட்டணமாகப் பெற்றுக் கொண்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. இதுவரை 21,435 இணைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்திலுள்ள கிராம மற்றும் நகரப் பகுதிகளுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி வழங்கும் நோக்கத்துடன் 1971 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நாட்டில் முன்னோடி நிறுவனமாகத் திகழ்கிறது. இத்திட்டம் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே இரண்டாண்டுகளில் முடிக்கப்பட்டு, 11.6.2009 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தினால் இராமநாத புரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்கள் பெரிதும் பயனடைந்துள்ளன.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment