கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, March 14, 2011

தி.மு.க நேர்காணல் முடிவடைந்தது : விரைவில் வேட்பாளர் பட்டியல்


திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் முதல்வர் கருணாநிதி தலைமையில் நேர்காணல் நடந்து வருகிறது. கடைசி நாளான 13.03.2011 அன்று நடந்த நேர்காணலில் நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய ரசாயன துறை அமைச்சர் மு.க.அழகிரி, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், மாநில அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் டிஆர் பாலு எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினரிடம் கடந்த மாதம் 25ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டன. 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர். அவர்களிடம் கடந்த 8ம் தேதி தொடங்கி 13.03.2011 அன்று வரை நேர்காணல் நடைபெற்றது.
13.03.2011 அன்று காலை புதுவை, காரைக்கால் பகுதியில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், மாலையில் தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் தொகுதிகளுக்கும் நேர்காணல் நடந்தது. இந்த நேர்காணலை முதல்வர் கருணாநிதி நடத்தினார்.


பாமக போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக, திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பாமக குழு அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது.
திமுக கூட்டணியில் பாமகவுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன், பாமக தொகுதி பங்கீட்டு குழு 13.03.2011 அன்று சந்தித்தது. காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது.
பின்னர், பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், ‘‘பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 30 தொகுதிகள் எவை என்பது குறித்து, திமுக குழுவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். ஒரு சில தொகுதிகள் முடிவாக தாமதமாகிறது. அதுகுறித்து பேச்சு வார்த்தை நீடிக்கிறது. பாமக போட்டியிடும் தொகுதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்’’ என்றார்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் சட்டப்பேரவை தொகுதிகள் 13.03.2011 அன்று இரவு முடிவு செய்யப்பட்டன. அவற்றின் விவரத்தை இன்று வெளியிடுவதாக தங்கபாலு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 13ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகளை முடிவு செய்வது தொடர்பாக தி.மு.க.வுடன் காங்கிரஸ் ஐவர் குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தகவல் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி. ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் அடங்கிய ஐவர் குழு, தி.மு.க.வுடன் மீண்டும் 13.03.2011 அன்று இரவு 9.15 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் பேச்சு வார்த்தை நடத்தியது. திமுக சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரை முருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.
தங்கபாலு அளித்த பேட்டியில், ‘‘தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்துள்ளது. திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. இன்று இரவுக்குள் காங்கிரஸ் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு காங்கிரஸ் தலைமையும் திமுக தலைமையும் ஒப்புதல் அளித்து 14.03.2011 அன்று (இன்று) திமுக அலுவலகத்தில் பட்டியல் வெளியிடப்படும்’’ என்றார்.

No comments:

Post a Comment