சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை, திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம நாராயணன், பெப்சி தொழிலாளர் சங்க தலைவர் வி.சி.குகநாதன் மற்றும் சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர் விடுதலை, அமிர்தம், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் 19.03.2011 அன்று சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் ஆதரவு பெற்றது திமுக கூட்டணி - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கருத்து :
‘காயிதே மில்லத் காலம் தொட்டு, இன்றுவரை முஸ்லீம்கள் ஒட்டுமொத்தமாக தி.மு.க. கூட்டணியை ஆதரித்து வருகின்றனர்‘ என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில செயலாளர் திருப்பூர் சர்த்தார் தெரிவித்தார்.
இது குறித்து கட்சியின் மாநில செயலாளர் திருப்பூர் சத்தார், துறைமுகம் தொகுதி வேட்பாளர் அல்தாப் உசேன் ஆகியோர் கூறியதாவது:
தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காயிதே மில்லத் காலம் தொட்டு, இன்றுவரை முஸ்லீம்கள் ஒட்டுமொத்தமாக தி.மு.க. கூட்டணியை ஆதரித்து வருகின்றனர். இது வரலாற்று உண்மை.
கூட்டணியில் எத்தனை தொகுதி என்பதை பார்க்கவில்லை. தி.மு.க. தலைவரின் நல்ல எண்ணத்தை பார்க்கிறோம். அவரால் கிடைக்கும் சமுதாய நன்மைகளை பார்க்கிறோம். தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோருக்கு குரல் கொடுக்கும் தலைவராக அவரை நாங்கள் பார்க்கிறோம்.
தமிழகத்தில் தி.மு.க. அரசால் பலன்பெறாதவர்களே இல்லை. இந்த சட்டமன்ற தேர்தல், செய்த சேவைகளை மக்கள் அங்கீகரிப்பார்கள் என்பதை உணர்த்தும் தேர்தலாக இருக்கும். வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment