கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 20, 2011

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்




துணை முதல்வரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், கொளத்தூர் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் 19.03.2011 அன்று நடந்தது.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் துணை முதல்வரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். இதையடுத்து, 19.03.2011 அன்று காலை அவர் கொளத்தூர் தொகுதிக்கு சென்று திமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்து, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் தேர்தல் பிரச்சாரம், திட்டங்கள் குறித்து விவாதித்தார்.
அப்போது, கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த பல்வேறு சமூக நல அமைப்பினர், மகளிர் அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், வியாபாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள், மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களது தொகுதியில் போட்டியிடுவதற்காக மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
வட சென்னை மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான வி.எஸ்.பாபு, சென்னை மாநகர மேயரும், தி.மு.க இளைஞர் அணி துணைச் செயலாளருமான மா.சுப்பிரமணியம், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி, கொளத்தூர் பகுதி செயலாளர் வி.எஸ்.ரவி, துணைச் செயலாளர்கள் எம்.கே.முகமது அனுஷா, எல்.டி.தாமஸ், ரோஸ்லின் இருதயராஜ், பொருளாளர் எஸ்.வி.பாஸ்கர், அவைத்தலைவர் நடன சபாபதி, மண்டலக் குழுத் தலைவர் வி.எஸ்.ஜெ. சீனிவாசன், வட்ட செயலாளர்கள் பன்னீர்செல்வம், ரமேஷ், ஏசுதாஸ், சந்திரசேகர், நாகராஜன், லெனின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, வட்டத் தலைவர் கௌரிசங்கர், பாமக மாவட்ட செயலாளர் சேகர், பகுதி செயலாளர் சந்துரு, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கபிலன், பகுதி செயலாளர் கார்த்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெயின் அலாவுதீன், பகுதி செயலாளர் முகமது ஷாஜகான், கட்டிட தொழிலாளர் கட்சி பொதுச்செயலாளர் மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் பிரேம்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

பின்னர், மு.க.ஸ்டாலின் பெரியார் திடலுக்கு சென்று தி.க தலைவர் கி.வீரமணியிடம் வாழ்த்து பெற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், மாபெரும் வெற்றியை திமுக கூட்டணி பெறவிருக்கிறது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் நான் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற வந்தேன். அவரும் என்னை மனபூர்வமாக வாழ்த்தினார் என்றார். .


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. திமுக கூட்டணி வலுவாக அமைந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி வெளியிடவுள்ள தேர்தல் அறிக்கை வெற்றிக்கு உறுதுணையாக அமையும். 234 தொகுதிகளிலும் திமுக தலைவர் போட்டியிடுகிறார் என்ற உணர்வோடு அனைவரும் உழைத்து வருகிறார்கள். ஆகையால் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

அதன் பின்னர் நிதி அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான க.அன்பழகன் இல்லத்துக்கு நேரில் சென்று அவரிடம் வாழ்த்துப் பெற்றார்.

No comments:

Post a Comment