திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதிகளை கண்டறிவதற்கான பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் 10.03.2011 அன்று தொடங்கியது. பேச்சுவார்த்தை முடிந்ததும், இரு குழுவினரும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினர்.
பேச்சு வார்த்தை முடிந்து வெளியே வந்த தங்கபாலு கூறியதாவது:
2ம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நல்ல முறையில் நடந்தது. மீண்டும். 11.03.2011 அன்று காலை 9 மணிக்கு பேச்சுவார்த்தை நடந்தப்படும்.
தாமதம் ஏற்படுவது ஏன்?
தொகுதிகளை காங்கிரஸ், திமுக கட்சி மட்டுமே முடிவு செய்து விட முடியாது. மற்ற தோழமை கட்சிகளை கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டியுள்ளது. விரைவில் நல்ல முடிவு எற்படும்.
இவ்வாறு தங்கபாலு தெரிவித்தார்.
பின்னர், முதல்வர் கருணாநிதி கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கான நேர்கானலை நடத்தினார். திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் கொடுத்தவர்களை அழைத்து பேசி வெற்றி வாய்ப்பு தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
இதில், அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மேயர் செல்வராஜ், பைந்தமிழ் பாரி, மு.கண்ணப்பன், பேரூர் நடராஜன், எஸ்.எஸ்.பொன்முடி, அருண்குமார், திருப்பூர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மருத்துவம், கல்வி உதவி - ^3.20 லட்சம் முதல்வர் வழங்கினார் :
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்கு 2005ல் முதல்வர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் ^5 கோடி தந்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்திற்கு 2007ல் ^1 கோடி வழங்கினார். மீதமுள்ள ^4 கோடியில் கிடைக்கும் வட்டி தொகையை முதல்வர் கருணாநிதி பிப்ரவரி 2007 முதல் நலிந்தோர் மருத்துவம், கல்விக்காக வழங்கி வருகிறார். இதுவரை ^1 கோடியே 91 லட்சத்து 85 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் கிடைத்த வட்டி தொகையில் 32 பேருக்கு தலா ^10 ஆயிரம் வீதம் ^3.20 லட்சத்தை கருணாநிதி வழங்கினார்.
No comments:
Post a Comment