கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 27, 2011

தமிழ்நாட்டுக்காக என்ன செய்தார் ஜெயலலிதா? - துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்விதமிழ்நாட்டுக்காக ஜெயலலிதா என்ன செய்தார் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவர் 26.03.2011 அன்று திறந்த ஜீப்பில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். 51, 52, 53 ஆகிய வட்டங்களில் உள்ள 65 தெருக்களில் சுமார் 21 கி.மீ தூரம் சென்று வாக்கு சேகரித்தார். மாலை 4.15 மணிக்கு திரு.வி.க.நகர் கோபாலபுரம் சந்திப்புக்கு மு.க.ஸ்டாலின் வந்தார். அவருக்கு பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின். திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்ற அவருக்கு, வழிநெடுகிலும் பெண்கள் மலர் தூவி வரவேற்றனர். வீடுகள்தோறும் உதயசூரியன் கோலம் போட்டிருந்தனர். மேயர் மா.சுப்பிரமணியன், வி.எஸ்.பாபு எம்எல்ஏ, கு.க.செல்வம், துர்கா ஸ்டாலின், ஜின்னா எம்பி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் உடன் சென்றனர்.
பேராயர் எஸ்றா.சற்குணம் தலைமையில் பாதிரியார்கள், பாபு மாணிக்கராஜ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள், குமார் தலைமையில் கூட்டுறவு ஊழியர்கள், தொழிற்சங்க தலைவர்கள், பிடிசி பாலு மற்றும் கி.நடராஜன் தலைமையில் போக்குவரத்து ஊழியர்கள் சீருடையுடன் அணிவகுத்து ஊர்வலமாக வந்தனர்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் சால்வை மற்றும் மாலைகள் அணிவித்து மக்கள் ஆதரவு தெரிவித்தனர். பிரசாரத்தின் போது, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஏப்ரல் 13ம் தேதி திமுக அணியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த நீங்கள் உறுதியேற்று ஆதரவு அளிக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் தந்த உறுதிமொழிகளையும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது யார் என்று நீங்கள் அறிவீர்கள். 2006 தேர்தலின்போது தந்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்வர் கருணாநிதி நிறைவேற்றினார். அதேபோல, இந்த தேர்தலின்போது தந்த வாக்குறுதிகளையும் முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார்.
திமுக அரசின் பணிகள் திட்டங்கள், சாதனைகள் தொடர்ந்திட, மேலும் பல சலுகைகள், சாதனைகள் கிடைத்திட, கருணாநிதி ஆட்சி தமிழகத்தில் மீண்டும் தொடர 6வது முறையாக அவர் மீண்டும் முதல்வராக நீங்கள் துணை நிற்க வேண்டும். அந்த வகையில் இந்த தொகுதியில் நான் வாக்கு சேகரித்து வருகிறேன். உங்களுக்காக பணியாற்றுவேன்; தொண்டாற்றுவேன். உங்கள் ஊழியனாக இருந்து பணிகளை நிறைவேற்றுவேன்.
நான், சென்னை நகரின் மேயராக 2 முறை இருந்து நிறைவேற்றிய திட்டங்கள், சாதனைகளை நீங்கள் அறிவீர்கள். ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏவாக 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் ஆற்றிய பணிகளை நீங்கள் அறிவீர்கள்.
அந்தப் பணிகள், திட்டங்கள் மேலும் தொடர, மீண்டும் திமுக ஆட்சி வர வேண்டும். அதற்கு இந்த தொகுதி துணை நிற்க வேண்டும். தேர்தலுக்காக மட்டுமல்ல; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவர்கள் நாங்கள். தெம்புடன், உரிமையுடன் தேர்தலில் நாங்கள் வாக்கு கேட்கிறோம். இதை செய்தோம், இந்த காரியம் செய்தோம் என்று கூறுகிறோம். இதை செய்யப் போகிறோம் என்றும் கூறுகிறோம்.
ஆனால், எதிர் அணியில் உள்ள ஜெயலலிதா தமிழ்நாட்டுக்காக இதுவரை என்ன செய்தார் என்று கூற முடியுமா? தமிழக மக்களை ஏமாற்ற, திசை திருப்ப தவறான அறிக்கையை வெளியிடுகிறார்கள்.
திமுக அறிவித்த தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் காப்பியை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும், இந்த தேர்தலில் கதாநாயகியாகவும் திகழ்கிறது. அங்கும் கதாநாயகன், கதாநாயகி இருக்கிறார்கள். முன்னாள் கதாநாயகி, முன்னாள் கதாநாயகன். அவர்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment