நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இடம் பெற்றுள்ளது.
இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு துறைமுகம், நாகப்பட்டினம், வாணியம்பாடி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்த்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர்மொய் தீன் ஆகியோர் மார்ச் 15ஆம் தேதி கையெழுத்திட்டனர்.
இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்தில் முகமது ஷேக் தாவூத்,
துறைமுகத்தில் அல்தாப் ஹுசைன்,
வாணியம்பாடியில் அப்துல் பாசித்
ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் கருணாநிதியிடம் வாழ்த்து :
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் 3 பேர், முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் கலைஞருடன் சந்திப்பு :
No comments:
Post a Comment