கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, March 21, 2011

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு



தி.மு.க. கூட்டணிக்கு வ.மு.ச. ஆதரவு :

தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் வி.பி.மணி, பொதுச்செயலாளர் ஜி.எஸ்.கமால்பாசா ஆகியோர் முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

’’நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தாங்கள் தலைமையில் அமைந்துள்ள ஜனநாயக முற்போக்கு வெற்றி கூட்டணிக்கு தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்கம் முழு ஆதரவு அளிப்பதில் பெருமையும், பெருமகிழ்ச்சியும் அடைகிறோம்.

தமிழகத்தின் உயர்வுக்கு தளராமல் பாடுபட்டு, தொழில்-வணிகத்துறையில் தொடர்ந்து நமது தமிழகம் முதலிடம் பெற பல்வேறு அரிய நலத்திட்டங்களை தீட்டி, அரங்கேற்றிடும் முதல்-அமைச்சர் கருணாநிதியை 6-வது முறையாகவும் ஆட்சி அரியணையில் அமர வைப்பது நன்றி உள்ள ஒவ்வொரு வணிகர்களின் கடமை என உள்ளத்தில் உறுதி ஏற்று, உணர்வோடு பாடுபட்டு, 234 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறித்து அளித்திட அனைத்து அமைப்புகளுடனும் இணைந்து அயராது பாடுபடுவோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

திமுகவுக்கு சிறுபான்மையினர் மனித உரிமை கவுன்சில் ஆதரவு :

மாநில சிறுபான்மையினர் மனித உரிமை கவுன்சில் தலைவர் மீரான்மைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு, முஸ்லிம் மாணவர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்குவதில் முன்னுரிமை, தொழில்புரிபவர்களுக்கு கடன் பெறுவதில் முன்னுரிமை, உலமாக்களுக்கு தனிநலவாரியம், பள்ளிவாசல் மற்றும் மதரசா பணியாளர்களுக்கு மாத ஊதியம் அதிகரிப்பு, இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க அரசின் தலைமை செயலாளர் தலைமையில் கண்காணிப்புக்குழு என கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் முஸ்லிம்களுக்கு தேவையான அளவு வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன.

இன்னும் தொடர்ந்து சிறுபான்மையின மாணவர்களுக்கு பயனளிக்க கூடிய பல்வேறு அம்ச திட்டங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. எனவே ஒட்டுமொத்த தமிழக சிறுபான்மையின முஸ்லிம் மக்களும் மீண்டும் இதே நல்லாட்சி அமைய தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

தி.மு.க. அணிக்கே எங்கள் ஆதரவு - வள்ளுவர் சமூகம் அறிவிப்பு :

அகில இந்திய வள்ளுவர் குல முன்னேற்ற சங்கத் தலைவர் கவிஞர் ராஜா.செந்தில்குமாரும் பொதுசெயலாளர் வேலுவும் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

’தமிழகத்தில் சமத்துவத்துடன் கூடிய நல்லாட்சியை வழங்கிவரும் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறோம். சமூகநீதி காக்கும் போரைத் தொடர்ந்து நடத்திவரும் முதல் அமைச்சர் கலைஞர்.. 6வது முறையாய் மீண்டும் ஆட்சிப்பொறுப்பில் அமரும் வகையில்.... ’தமிழின அரிமா’ தொல் திருமாவளவனின் வழிகாட்டுதலின் பேரில் இயங்கிவரும் எங்கள் ’வள்ளுவர் குல முன்னேற்ற சங்கம்... தி.மு.க. கூட்டணியின் மகத்தான வெற்றிக்காகப் பாடுபடும். தமிழகத்தில் இருக்கும் 70 லட்சம் வள்ளுவர் சமூக மக்களும்... முதல் அமைச்சர் கலைஞர் தலைமையிலான முற்போக்குக் கூட்டணிக்கு பலம் சேர்க்கும் விதத்தில் வாக்களிப்பார்கள்’என்று தெரிவித்துள்ளனர்.

திமுக கூட்டணிக்கு ஆதரவு - பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் :

தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநில செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் ரத்தினகுமார் தலைமை தாங்கினார்.


கூட்டத்தில், கடந்த 5 ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்த முதல் அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


மேலும், தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணி இடங்களையும் விரைவில் பணி நியனம் செய்ய வேண்டும். வரும் ஏப்ரல் 4ஆம் தேதி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் மாநில மாநாட்டில் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதல்வருடன் சந்திப்பு - 31 அமைப்புகள், அறிஞர்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு :

திமுகவுக்கு 31 அமைப்புகளும், அறிஞர் பெருமக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திமுக 20.03.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
முனைவர் அவ்வை.நடராசன், சிலம்பொலி செல்லப்பனார், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிவேந்தர் மு.மேத்தா, பேராசிரியர் ஆறு.அழகப்பன், கி.ஆ.பெ.வி மணிமேகலைக் கண்ணன், முனைவர் மணிமேகலை புட்பராசு, கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர், எழுத்தாளர் எம்.நடராசன், கவிஞர் பாக்கம் பிரதாபசிம்மன், புலவர் மரு.விநாயகம், மரு.சு.ரவீந்திரன், முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியம், அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் சூரியமூர்த்தி ஆகியோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் அகில சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை, தெலுங்கு தேவாங்க சமூக நலம் மற்றும் கைத்தறி நெசவாளர் முன்னேற்ற சங்கம்,, அம்பேத்கர் தமிழ் மக்கள் களம், தமிழ்நாடு ஆதிஆந்திரா டாக்டர் கலைஞர் நற்பணி மன்றம், வள்ளுவர் குல முன்னேற்றச் சங்கம், அனைத்து இந்திய கை பூ வேலை கூலி தொழிலாளர் சங்கம், திராவிட விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம், தென்னிந்திய மருத்துவர், பண்டிதர், இசை வேளாளர், நாவித்தர் முன்னேற்ற சங்கம், பிற்படுத்தப்பட்டோர் சங்க பாதுகாப்பு பேரவை, திண்டுக்கல் மாவட்ட அருந்ததியர்கள் நலச் சங்கம், தமிழ்நாடு கார்பென்டர்&வார்னிஷ் தொழிலாளர் முன்னணி,
புரட்சிகர சோசலிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி, ஜீவா கம்யூனிஸ்ட் கட்சி (லெனினிஸ்ட்), தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் சங்கம், அனைத்து கருணீகர் முன்னேற்ற பேரவை,தேசிய மக்கள் கட்சி, தலைமை இசை வேளாளர் சங்கம், முன்னாள் முதல்வர் ஓமந்தூரார் பொது நல நற்பணி இயக்கம், முதலியார்கள் முன்னேற்ற சங்கம்,
தமிழ்நாடு ஸ்ரீகருணீகர் சங்கம், முக்கூடல் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயில் வாரிசுதாரர்கள், தமிழ்நாடு மக்கள் பேரவை, தமிழ்நாடு சோசலிச அமைப்புச்சாரா தொழிலாளர் சங்கம், அகில இந்திய கட்டிட அனைத்து கூலி தொ£ழிலாளர் சங்கம், டாக்டர் அம்பேத்கர் எஸ்.டி, எஸ்டி. நல சங்கம், தமிழ்நாடு ராஷ்டிரிய லோக் தன் (அஜீத்சிங்) கட்சி, வன்னியர் முற்போக்கு சங்கம், அகில இந்திய தலித் அருந்ததியர் மக்கள் கட்சி, தமிழ்நாடு மின்கலப்பெட்டி பணியாளர் முன்னேற்றச் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment