கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, March 21, 2011

தமிழகம் முழுவதும் திமுக கூட்டணியை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரசாரம் - முதல்வரை சந்தித்தபின் அறிவிப்பு

முதல்வர் கருணாநிதியை நடிகர் வடிவேலு 21.03.2011 அன்று காலை சந்தித்து பேசினார். அப்போது, திமுகவை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யப்போவதாக வடிவேலு தெரிவித்தார்.
நடிகர் வடிவேலு 21.03.2011 அன்று காலை 10.45 மணிக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரியுடன் ஒரே காரில் கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு வந்தார். அங்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் இருந்தனர். அவர்களுடன் சென்று முதல்வர் கருணாநிதியை வடிவேலு சந்தித்து பேசினார். 11.10 மணி வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். பின் வெளியில் வந்த வடிவேலு, நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைந்துள்ள திமுக கூட்டணிக்காக தேர்தல் பிரசாரம் செய்யப்போகிறேன். கடந்த முறை ‘கதாநாயகன்’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கையில் நல்ல பல திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கினார். 108 ஆம்புலன்ஸ், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டிவி என்று எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இப்போது, அதைவிட டபுள் மடங்கு ஏகப்பட்ட திட்டங்களை அள்ளி வீசியுள்ளார் நான், ஏழையாக இருந்தவன் என்பதால் இந்த திட்டங்களின் அருமை பெருமைகள் தெரிகிறது.
முதியோர் உதவித் தொகையை ரூ.750 ஆக உயர்த்தியுள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அறிவித்துள்ளார். கர்ப்பிணிகள் உதவித் தொகையை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக ஆக்கியுள்ளார். அதுபோல திருமண உதவி தொகையை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக அதிகரித்துள்ளார். ஏழைகளுக்கு மாதம் 35 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இப்படி எவ்வளவோ திட்டங்களை அள்ளி வீசியுள்ளார்.
இதை எல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்வேன். 6&வது முறையாக கருணாநிதி முதல்வராக பதவியேற்பார். இப்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை எல்லாம் நிச்சயம் நிறைவேற்றித் தருவார்.
இவ்வாறு நடிகர் வடிவேலு கூறினார்.
பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
விஜயகாந்த்தை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவீர்களா?
முதல்வர் கருணாநிதி, இப்போது ‘கதாநாயகி’ என்ற பெயரை வைத்து அருமையான திட்டங்களை எல்லாம் அள்ளி வீசியுள்ளார். இங்கு இன்டர்வெல் எல்லாம் முடிந்து, கிளைமாக்சில் இருக்கிறோம். அங்கே ஷூட்டிங்கூட ஆரம்பிக்கவில்லை. ஏற்கனவே நான் சொன்னபடி இங்கே வந்துள்ளேன். தேர்தலில் விஜயகாந்த் நிற்கட்டும். அவர் எங்கே நிற்பாரோ அங்கு நிற்பேன் என்று ஏற்கனவே சொல்லியுள்ளேன். முதலில் அவர் நிற்கட்டும். அதற்கு பிறகு உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன்.
எப்போது பிரசாரத்தை ஆரம்பிக்கிறீர்கள்?
திருவாரூரில் 23, 24&ம் தேதி பிரசாரம் செய்கிறேன். முதல்வருடன் கூட்டத்தில் பேசுகிறேன். எப்போது பிரசாரத்தை அவர் ஆரம்பிக்கச் சொன்னாலும், ‘கிளப்புங்கள் படையை’ என்று உடனே தொடங்கி விடுவேன். முதல்வர் அறிவித்துள்ள திட்டங்கள், பிரமாதமாக இருக்கிறது. மக்களுக்கான இந்த நலத்திட்டங்கள், இந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு. தமிழகத்தை மூவேந்தர்கள் ஆண்டுள்ளனர். அதன்படி சோழராக முதல்வர் கருணாநிதி இருக்கிறார். பாண்டியனாக அண்ணன் அழகிரி இருக்கிறார். சேர மன்னனாக அண்ணன் தளபதி இருக்கிறார். முதல்வர் கருணாநிதி தலைமையில் அருமையான டீம் அமைந்துள்ளது.
அண்ணன் அழகிரி சச்சினாகவும், தளபதி சேவாக்காகவும் இருக்கிறார்கள். இவர்கள் எந்த பந்தையும் அடித்து விளாசுவார்கள். காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் ஒட்டுமொத்த உருவாக கருணாநிதி இருக்கிறார். கட்சியில் ஒருவனாக, பொதுமக்களில் ஒருவராக இருந்து மனதார தேர்தல் பிரசாரம் செய்வேன்.
பிரசாரத்தில் என்னென்ன விஷயங்களை பேசுவீர்கள்?
கூட்டத்தில் நான் பேசும்போது என்னென்ன விஷயங்கள் என்பதை தெரிவிப்பேன்.
இவ்வாறு வடிவேலு கூறினார்.

No comments:

Post a Comment