
தமிழக சட்டமன்ற தேர்தலில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
இது குறித்து தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 24-ந் தேதி மாலை புதுக்கோட்டையிலும்,
25-ந் தேதி திருச்சியிலும் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
26-ந் தேதி, மற்றும் 27-ந் தேதி கொளத்தூர் தொகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.
28-ந் தேதி கன்னியாகுமரியிலும்,
29-ந் தேதி தூத்துக்குடியிலும்,
30-ந் தேதி திருநெல்வேலியிலும்,
31-ந் தேதி விருதுநகரிலும்,
அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி காஞ்சீபுரத்திலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
2-ந் தேதி கொளத்தூர் தொகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.
3-ந் தேதி கோவையிலும்,
4-ந் தேதி திருப்பூரிலும்,
5-ந் தேதி ஈரோட்டிலும்,
6-ந் தேதி நாமக்கல்லிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
7-ந் தேதி கொளத்தூர் தொகுதியிலும்,
8-ந் தேதி வேலூரிலும்,
9-ந் தேதி திருவள்ளூரிலும்,
10-ந் தேதி, மற்றும் 11-ந் தேதி வடசென்னை, தென் சென்னையிலும் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment