திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் 26.03.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி மார்ச் 30ம் தேதி கோவையிலும், 31ம் தேதி ஈரோட்டிலும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதனால், அதைச் சுற்றியுள்ள தொகுதிகளில், நான் (அன்பழகன்) அறிவித்திருந்த சுற்றுப்பயணத்தின் தேதியை மாற்றிக் கொள்ள விரும்புகிறேன். மாற்றி அமைக்கப்பட்ட சுற்றுப்பயண விவரம்:
மார்ச் 29ம் தேதி கீரனூர், அன்னவாசல், புதுக்கோட்டை. 30ம் தேதி அரவாக்குறிச்சி, வேடசந்தூர், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி. 31ம் தேதி தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை, கிணத்துக்கடவு ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளேன். ஏப்ரல் 1ம் தேதி& கோவை (தெற்கு), கவுண்டம்பாளையம், கோவை (வடக்கு). 2ம் தேதி& மேட்டுப்பாளையம், அவிநாசி, திருப்பூர் (தெற்கு), திருப்பூர் (வடக்கு). 3ம் தேதி & கிருஷ்ணராயபுரம், குளித்தலை, முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், 4ம் தேதி & லால்குடி, திருவரங்கம், திருவரம்பூர், திருச்சி ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிக்கிறேன்.
அந்தந்த மாவட்ட செயலாளர்களும், வேட்பாளர்களும் அதற்கேற்ப எனது கூட்ட நிகழ்ச்சியை அமைத்திடமாறு கேட்டுக் கொள் கிறேன். எந்த காரணத்தாலும், எந்த நிகழ்ச்சியிலும் இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.
திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக நான் சுற்றுப்பயணமாக வரும்போது, அறிவித்துள்ள ஊர்களில் ஓர் இடத்தில் மட்டுமே கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும். மூன்றடி உயரத்தில் பத்து அடி சதுரத்தில் சிறிய மேடை அமைத்தால் போதும். வேட்பாளர், கூட்டத் தலைவர் இருவர் மட்டும் மேடையில் இருந்தால் நல்லது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி காவல் துறை அனுமதியுடன் ஒலிபெருக்கி அமைக்க வேண்டும். வேட் பாளர் தமது வேண்டுகோளை தெரிவித்தவுடன், நான் 15 முதல் 20 நிமிடம் பேசிவிட்டு புறப்பட வேண்டும். ஒவ்வொரு மாலையும் நான்கு தொகுதிகளில் பிரசாரம் செய்தாக வேண்டும். இடையில் பயணம் செய்வதற்கு நேரம் தேவை. மேலும், எனது பயணத்தில் 2, 3 கார்களை தவிர வேறு கார் கள் தொடர்ந்து வரக்கூடாது. எனவே, கூட்டம் ஏற்பாடு செய்யும் தோழர்கள் இதற்கேற்ப ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment