கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, March 22, 2011

வென்டிலேட்டரில் ஓடுது அதிமுக கூட்டணி - மு.க.அழகிரி பேட்டிமத்திய அமைச்சர் மு.க.அழகிரியை அவரது வீட்டில் 22.03.2011 அன்று பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த பல்வேறு பிரிவினர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரியை 22.03.2011 அன்று சுபாஷிஸ்ட் பார்வார்டு பிளாக் நிர்வாகி முத்தையா பசும்பொன் சந்தித்தார். சட்டசபை தேர்தலில் தி.மு.க., வுக்கு ஆதரவு நல்குவதாக அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மு.க.அழகிரி கூறியதாவது:
திமுக கூட்டணிக்கு பார்வர்டு பிளாக் சந்தானம் பிரிவு, வல்லரசு பிரிவு ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று பார்வர்டு பிளாக் சுபாஷ்டிஸ் பிரிவு, தினகரன் பிரிவைச் சேர்ந்தவர்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளர். பல்வேறு தரப்பினரின் ஆதரவு இருப்பதால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:

அதிமுக தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி பேச்சு ஒரு வழியாக முடிந்து வேட்பாளர்களை அறிவித்துள்ளனரே?
அதிமுக கூட்டணி வென்டிலேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. வென்டிலேட்டரை எடுத்து விட்டால் என்ன கதி ஏற்படுமோ அதுதான் அவர்களுக்கு ஏற்படும். ஏப்ரல் 13ம் தேதி மக்களே வென்டிலேட்டரை அகற்றி விடுவர்.
விஜயகாந்த் ரோஷக்காரர், அதிமுக கூட்டணி யில் சேரமாட்டார் என்றீர்களே?
அவர் ரோஷக்காரர் இல்லை என்பதை நிரூபித்து விட்டார். இன்னும் 20 நாளில் அவர் என்ன பாடுபடப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
தென்மாவட்டங்களில் பிரசாரத்திற்கு யார் வருகின்றனர்?
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகை குஷ்பு, மத்திய அமைச்சர் நெப்போலியன் பிரசாரத்திற்கு வருகின்றனர். நான் தென் மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று கூட்டணி கட்சியினரை அழைத்து ஆலோசித்து உற்சாகப்படுத்துவேன். வெற்றிக்கு தேவையான வியூகங்களை வகுத்துக் கொடுத்து வருவேன். திமுக கூட்டணியின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.
பார்வர்டு பிளாக் தலைவர்கள் (சுபாஷிஸ்ட்) பசும்பொன்முத்தையா, தினகரன் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மாநில தலைவர் கணேசன் ஆகியோர் மு.க.அழகிரிக்கு பொன்னாடை போர்த்தி ஆதரவு தெரிவித்தனர். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, துணை மேயர் மன்னன், இளைஞரணி மதுரை நகர்மாவட்ட செயலாளர் ஜெயராமன் உடன் இருந்தனர்.


எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் தி.மு.க.வில் சேர்ந்தார் :

மதுரை எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் விலகி, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார்.
மதுரை நகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் ரத்தினம். இவரது மனைவி விஜயா. 67வது வட்ட அ.தி.மு.க. மகளிரணி செயலாளர். மதுரை 2ம் பகுதி அ.தி.மு.க. இணைச் செயலாளர் சுகுமார். மூவரும் அ.தி.மு.க.வில் இருந்து விலகி, மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்து 22.03.2011 அன்று தி.மு.க.வில் சேர்ந்தனர்.
ரத்தினம் கூறும்போது “எம்.ஜி.ஆர். 20.10.72ல் அ.தி.மு.க.வை துவங்கும்போது, மதுரையில் தாமரைகொடியை ஏற்றியவர்களில் நானும் ஒருவன். கட்சியில் 39 ஆண்டுகளாக விசுவாசமாக இருந்தேன். இன்றைக்கு கட்சியில் எம்.ஜி.ஆர். விசுவாசிகள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். கட்சிக்காக இவ்வளவு காலம் உழைத்து ஓடாய் தேய்ந்ததுதான் மிச்சம். வைகோ 5 ஆண்டுகளாக விசுவாசத்தை காட்டியும் கூட்டணியில் இருந்து ஜெயலலிதா விரட்டிவிட்டார். கட்சி அழிவு பாதையில் போகிறது. மு,க.அழகிரி சொல்லி இருப்பதுபோல் இந்த தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. இருக்காது என்ற உணர்வு தொண்டர்களிடம் ஏற்பட்டுள் ளது. இனிமேலும் ஜெயலலிதாவை நம்பி பயன் இல்லை என்ற விரத்தி யுடன் வெளியேறி னோம். மீண்டும் 39 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க.வில் சேர்ந்துள்ளோம்“ என் றார்.No comments:

Post a Comment