திருவாரூர் செல்வதற்காக, முதல் அமைச்சர் கருணாநிதி 23.03.2011 அன்று காலை, 6.45 மணியளவில் கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், கனிமொழி எம்.பி. ஆகியோரும் உடன் சென்றனர்.
முன்னதாக திருவாரூர் புறப்பட்ட முதல் அமைச்சரை டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., மு.க.தமிழரசு, கல்யாணசுந்தரம், சண்முகசுந்தரம், துறைமுகம் காஜா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பீட்டர் அல்போன்ஸ், விடியல் சேகர், ஞானசேகரன், கோவை தங்கம், சிவராஜ் ஆகியோர் சந்தித்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
முதல் அமைச்சர் கருணாநிதிக்கு பாலவாக்கம், உத்தண்டி, கோவளம், மாமல்லபுரம், அன்னபுரம், புதுப்பாக்கம், அணை யாச்சேரி, கடப்பாக்கம், கொடக்காடு, மரக்காணம், அனுமந்தை, பூண்டியார் பாளையம், பெரிய முதலி யார் சாவடி, கோட்டபுரம் ஆகிய இடங்களில் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 10 மணியளவில் புதுச்சேரி சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அப்போது புதுச்சேரி தி.மு.க. வேட்பாளர்கள் அவரை சந்தித்து புதுவை சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் முதல் அமைச்சர் கருணாநிதி அங்கிருந்து புறப்பட்டார். திருவாரூர் செல்லும் வரை வழியில் பல்வேறு இடங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment