கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 20, 2011

திமுக தேர்தல் அறிக்கை: கலைஞர் வெளியிட்டார்கடந்த சட்டப்பேரவை தேர்தலின் கதாநாயகன் என்று வர்ணிக்கப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கை, தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஒரு ரூபாய்க்கு ரேஷன் அரிசி, இலவச கலர் டிவி, 2 ஏக்கர் இலவச நிலம் என திமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் செயல்வடிவம் பெற்றன. கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் இந்த திட்டங்கள் மூலம் பயன் அடைந்த மக்கள், இந்த தேர்தலிலும் திமுகவின் தேர்தல் அறிக்கையை ஆவலோடு எதிர்பார்த்தனர்.
அதுபற்றி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கேள்விகள் எழுப்பப்பட்டு, அதற்கு முதல்வர் கருணாநிதி அளித்த பதிலும் பத்திரிகைகளில் முக்கிய இடம் பிடித்தது. “கடந்த தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால், இந்த தேர்தலில் கதாநாயகி” என்று தனக்கே உரிய பாணியில் முதல்வர் அளித்த பதிலை, முழுமையாக மெய்ப்பிக்கும் விதத்தில் நேற்று வெளியான திமுக தேர்தல் அறிக்கை அமைந்தது.
19.03.2011 அன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடந்த விழாவில், ‘2011 தி.மு.க. தேர்தல் அறிக்கையை‘ முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். நிதி அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்.

அப்போது அண்ணா அறிவாலயத்தில் கூடியிருந்த திமுகவினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக முன்னணி நிர்வாகிகள் உள்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி, பின்னர் ஒவ்வொரு கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசும்போது, “தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்படும் என்று கேலி பேசும் வகையில் தி.மு.க. வாக்குறுதிகள் ஆகிவிடக் கூடாது அல்லது நிறைவேற்ற முடியாமல் போய் விடக் கூடாது என்பதற்காக, ‘சொன்னதை செய்வோம். செய்வதை சொல்வோம்‘ என்பதை தி.முக கடைபிடித்து வருகிறது.
கடந்த தேர்தலில் நிறைவேறாத எஞ்சிய வாக்குறுதிகளும் உண்டு. காவேரி பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை, சேது சமுத்திர திட்டம், கச்சத்தீவு மீட்பு போன்றவை அவை. இதற்கு தி.மு.க. அரசோ அல்லது அக்கறை இன்மையோ காரணம் அல்ல. முட்டுக்கட்டையாக இருப்பது நீதிமன்ற தலையீடு, வழக்குகள் தான் காரணம்.
இந்த அரசு மீது யாரும் குற்றம் கூற முடியாது. முட்டுக்கட்டை போடப்பட்டு ஆடாமல் நிற்கும் தேர், முட்டுக்கட்டை அகற்றப்பட்டால் அசைந்து ஓடும். அது போல வழக்கு, நீதிமன்ற தலையீட்டால் நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். அந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு விட்டதாக கருத தேவையில்லை. இன்று இல்லாவிட்டால் நாளை, அல்லது மறுநாள் அல்லது என்றோ ஒரு நாள் நிறைவேற்றப்படும்.
உங்கள் ஆதரவை எதிர்பார்த்து நிற்கும் எங்களுக்கு, உங்களுக்காக பணியாற்ற உத்தரவிடுங்கள். உங்கள் கட்டளையை ஏற்று சொன்னதை செய்ய வாய்ப்பு தாருங்கள். செய்ததை சொல்லி, செய்யப் போவதை விளக்குவதாக இந்த தேர்தல் அறிக்கை இருக்கும்” என்றார்.
அதன்படி இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்:
 • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் ஸி2.5 லட்சம் கடனுதவி இனி ஸி4 லட்சமாக உயர்த்தப்படும். அதில் ஸி2 லட்சம் முழுக்க முழுக்க மானியம்.
 • நகரங்களில் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு குறைந்த வாடகையில் குடியிருப்பு திட்டம்.
 • முதியோர்கள் பயணம் செய்ய, அரசு உள்ளூர் பஸ்களில் இலவச பாஸ்.
 • முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு தற்போது மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் சென்ற ஆண்டு 400 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டதையடுத்து, அந்த தொகையை மேலும் உயர்த்தி, மாதம் ஒன்றுக்கு 750 ரூபாய் வழங்கப்படும்.

 • விவசாய
  இடுபொருட்களை ஊர்திகள் மூலமாக கிராமங்களுக்கே சென்று மானிய விலையில் வழங்கும் திட்டம்.
 • அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம்.
 • திருமண உதவித் தொகை ஸி30 ஆயிரம்,
 • கர்ப்பிணிகளுக்கான உதவி ஸீ10 ஆயிரம் ஆக உயர்வு.கலைஞர்வீடுவழங்கும்திட்டமானியம்ஸீ 1 லட்சமாகிறது
 • தாய்மார்களின்சிரமத்தைகுறைக்ககிரைண்டர்அல்லதுமிக்ஸிஇலவசம்
 • அந்தியோதயாகுடும்பஅட்டைதாரர்களுக்குமாதம் 35 கிலோஅரிசிஇலவசம்
 • சிறப்பாக செயல்படும் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும்.
 • செம்மொழியாம் தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்.
 • நீதிமன்றங்களில் தமிழ் மொழியை முழுமையாக அமல்படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது.
 • திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 • மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும்.
 • உழவர் சந்தை போன்று நகர்புறங்களில் நுகர்வோர் சந்தை அமைக்கப்படும்
 • நுகர்வோர் சந்தையில் காய்கறிகள் குறைந்த விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 • நெல், கரும்பு உள்ளிட்டவற்றிற்கு நியாய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்ப்படும்.
 • விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்கப்படுவது தடுக்கப்படும்.
 • கிராமங்களில் உணவுப் பதப்படுத்துதல் ஆலை அமைத்தால் 5 ஆண்டு விற்பனை வரி ரத்து செய்யப்படும்.
 • படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற தகுந்த உதவியுடன் பயிற்சி அளிக்கப்படும்.
 • மாவட்டந்தோறும் இளைஞர்களுக்கு சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி தரப்படும்.
 • ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கும் சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம்.
 • தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி மற்றும் இலவச கேஸ் அடுப்பு வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.
 • குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ அயோடின் கலந்த உப்பு மானிய விலையில் வழங்கப்படும்.
 • இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க மீனவர்களுக்கு புதிய காப்பீடுத் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
 • விசைப்படகு மீனவர்களுக்கு 2000 லிட்டர் டீசல் மானிய விலையில் வழங்கப்படும்.
 • நாட்டுப் படகு மீனவர்களுக்கு 500 லிட்டர் மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்கப்படும்.
 • கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 • விவசாய உற்பத்தியை பெருக்கிட தனி தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
 • முன்னாள் ராணுவத்தினரின் குறைகளை களைய குழு அமைக்கப்படும்.
 • திருக்கோவில்களுக்கு வருவாயை அதிகரிக்க நில வங்கி உருவாக்கப்படும்.
 • சிறுகுறு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் சுழல்நிதி வழங்கப்படும்.
 • தொழிலில் பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பெருக்க புதியத்திட்டம்.
 • அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
 • டெல்டா மாவட்டங்களில் வைக்கோலை பயன்படுத்தி காளன் வளர்க்க சிறப்புத் திட்டம்.
 • இலவச மின்சாரம் தோட்டக்கலை பயிர்களுக்கு விரிவுப்படுத்தப்படும்.
 • வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.2 லட்சம்
 • அரசு அலுவலங்களில் சான்றிதழ் பெற பொதுமக்கள் சேவை மையம்.
 • எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவம், கல்வி அனைத்து வசதியும் வழங்கப்படும்.
 • இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
 • கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
 • கோவை, மதுரை நகரில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
 • சென்னையில் இருந்து கோவைக்கு புல்லட் ரயில் இயக்க நடவடிக்கை.
 • குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னூரிமை வழங்கப்படும்.


 • அரசு பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுமுறை மூன்று மாதத்திலிருந்து 4 மாதம் ஆக உயர்தப்படும்.


 • சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை.


 • அரசு கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிடர் மாணவர்களுக்கு லேப்டாப்


 • அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையம்


 • எல்லா மாவடட்டங்களுக்கும் அரசு செவிலியர் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்படும்.


 • சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை அதிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


 • திருச்சி,மதுரையில் மனநல மருத்துவமனை அமைக்கப்படும்.


 • அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் மூன்று சீருடை வழங்கப்படும்.


 • சென்னையில் தாம்பரம் போல் மதுரையில் காசநோய் மருத்துவமனை அமைக்கப்படும்.


 • மாதம் ஒரு நாள் அரசு மருத்துவர்கள் வீடு தேடி சென்று முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.


 • தரமான கல்வி பெற 2006 முதல் 2009 வரை பெறப்பட்ட கல்விக்கடனை அரசு செலுத்தும்.


 • சாயக்கழிவுகளை இயற்கை முறையில் ஆவியாக்க நடவடிக்கை


 • பொங்கல் தோறும் கிராமங்களில் அரசு சார்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்


 • திருநங்கைகளுக்கு சுய உதவிக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


 • சொட்டு நீர் பாசனம் செய்ய விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.


 • மாவட்ட மருத்துவமனைகளில் உயிர்காக்கும் உயிர் சிகிச்சை அமைக்க நடவடிக்கை

  தரமான கல்வி வழங்க அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்.

  போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண, சென்னை அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும்
 • சாலை விபத்தில் காயமடைவோருக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கப்படும்
 • தனியார் மருத்துவமனைகளில் கட்டணங்களை ஒழுங்குபடுத்த அரசு சார்பில் மருத்துவ கட்டண ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும்
 • மஞ்சள் காமாலை போன்றவற்றுக்கு போடப்படும் தடுப்பூசி, இலவசமாக போடப்படும். அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் எய்ட்ஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படும்.
 • உயர்கல்விக்கு நுழைவுத்தேர்வு கூடாது என்பதை தி.மு.க. வலியுறுத்தும்.
 • தலித் கிறிஸ்தவர்கள் ஆதிதிராவிடர் பட்டியலில் இடம்பெற வலியுறுத்தும்.
 • முன்பேர வணிகம், ïக வணிகத்தை தடை செய்ய வலியுறுத்துவோம்
 • அனைத்து மாவட்டங்களிலும் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.
 • அனைத்து மாவட்டங்களிலும் அரசு பொறியியல் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்
 • கல்வியை மாநில அரசு பட்டியலில் கொண்டுவர வலியுறுத்தப்படும். தரமான இலவச கல்வி அளிக்க அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்
 • கைத்தறி நெசவாளர்களுக்கு 200 ïனிட்வரை இலவச மின்சாரம் அளிக்கப்படும். தோட்டக்கலை பயிர்களுக்கும் இலவச மின்சாரம் விரிவுபடுத்தப்படும்
 • சேது சமுத்திரம் திட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். முல்லை பெரியாறு, பாலாறு ஆகிய பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும்
 • தடையின்றி மின்சாரம் கிடைக்க மின்உற்பத்தி திட்டங்கள் அதிகரிக்கப்படும்
 • விவசாய நிலங்கள், வீட்டு மனைகளாக மாற்றுவது தடுக்கப்படும்.
 • ஈழத்தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திமுக தொடர்ந்து வலியுறுத்துகிறது. மேலும் ஈழத்தமிழர்கள் அமைதியான சூழலில் வாழ்வதற்கு உரிய உறுதியான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள தீவிர முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்

திமுக அளித்துள்ள வாக்குறுதிகள், கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுத் தரும் என்று திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment