பாமக போட்டியிடும் தொகுதிகள் :
திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் 15.03.2011 அன்று முடிவு செய்யப்பட்டன. திமுக - பாமக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியும், பாமக நிறுவனர் ராமதாஸும் உடன்பாட்டில் கையெழுத்தும் இட்டனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க கட்சி போட்டியிடும் 30 தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விவரம்; விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் : சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் உடன்பாடு ஆனது. திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் வி.சி. தலைவர் திருமாவளவன் 15.03.2011 அன்று கையெழுத்திட்டார். அதன்படி தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் பட்டியல் 15.03.2011 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இ.யூ. முஸ்லீக் லீக் தொகுதிகள் : திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இன்று கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன. திமுக - முஸ்லீம் லீக் உடன்பாடு ஏற்பட்டது. இரு தரப்பினரும் உடன்பாட்டில் 15.03.2011 அன்று கையெழுத்தும் இட்டனர். அதன்படி முஸ்லீக் துறைமுகம், வாணியம்பாடி, நாகை தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதால், 16.03.2011 அன்று வெளியிடப்படுவதாக இருந்த திமுக வேட்பாளர் பட்டியல் 17.03.2011 அன்று வெளியிடப்படும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
1.வேளச்சேரி, 2,ஆலங்குடி, 3.கும்மிடிப்பூண்டி, 4.பாலகோடு, 5.திருப்போரூர், 6.ஜோலார் பேட்டை, 7.எடப்பாடி, 8.மதுரவாயில், 9.அணைக்கட்டு, 10.பவுனகிரி, 11.திண்டிவனம், 12.வேதாரண்யம், 13.செங்கல்பட்டு, 14. காஞ்சிபுரம், 15.ஓமலூர், 16.பூமபு்கார், 17.பவானி, 18. ஜெயங்கொண்டான், 19.கோவில்பட்டி, 20. பரமத்திவேலூர், 21.நெய்வேலி, 22.தர்மபுரி, 23.ஆற்காடு, 24.போளூர், 25. செஞ்சி, 26.மயிலம், 27. திண்டுக்கல், 28.பர்கூர், 29. சோழவந்தான் (தனி) 30. மேட்டூர்.
அதன் விபரம்;
1.சீர்காழி (தனி), 2. அரக்கோணம் (தனி), 3.கள்ளக்குறிச்சி (தனி), 4.உளுந்தூர்பேட்டை, 5. திட்டக்குடி (தனி), 6. ஊத்தங்கரை (தனி), 7. அரூர் (தனி), 8. சோழிங்கநல்லூர், 9. காட்டுமன்னார்கோயில் (தனி), 10. செய்யூர் (தனி).
நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து திமுக வேட்பாளர் பட்டியல் 16.03.2011 அன்று வெளியாகும் முதல் அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதால், இன்று வெளியிடப்படுவதாக இருந்த திமுக வேட்பாளர் பட்டியல் 15.03.2011 அன்று வெளியிடப்படும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment