கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, March 24, 2011

அனைவருக்கும் இலவச லேப்டாப் - முதல்வர் கருணாநிதி



தொழில் கல்வி படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச லேப்டாப் அளிக்கப்படும் ; 60 வயதல்ல, 58 வயதானால் போதும், இலவச பஸ்பாஸ் வழங்கப்படும் என்று திருவாரூரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை முதல்வர் கருணாநிதி , திருவாரூரில் 23.03.2011 அன்று தொடங்கினார். அங்கு நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
எந்த மண்ணில் என் தோழர்களோடு விளையாடிக் கழித்தேனோ அந்த மண்ணில்... எந்த மண்ணில் என் நண்பர்களோடு படித்தேனோ அந்த மண்ணில்... எந்த மண்ணில் தந்தைப் பெரியாரின் தலைமையை ஏற்று வழி நடந்தேனோ அந்த மண்ணில்... எந்த மண்ணில் அறிஞர் அண்ணாவின் அறிவுரையைக் கேட்டு அவர் வழியில் பின்பற்றி நடந்தேனோ அந்த மண்ணில்... நான் இப்போது சட்டப் பேரவைக்கான வேட்பாளராம். நீங்கள் அறிவித்திருக்கிறீர்கள்.
வேறு வழியின்றி வந்திருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். எனக்கு ஏற்பட்ட ஆசையின் காரணத்தில்தான் வந்திருக்கிறேன். சிலர் சொல்வார்கள் திசையெல்லாம் சென்று சட்டப் பேரவைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுவிட்டாய். இங்கு வந்து வீரத்தை காட்டலாமே, சொந்த மண்ணில் வீரத்தை காட்டமாட்டாயா என்று யாராவது கேட்கமாட்டார்களா? அந்த அச்சத்தின் காரணமாகத்தான் சொந்த மண்ணில், உங்கள் மடியில் அமர்ந்து, உங்கள் கரம்பற்றி, உங்கள் கால்வழி நடந்து உங்க ஆதரவுடன் இந்த முறை சட்டப் பேரவைக்கு செல்லலாம் என்று எண்ணிதான் இங்கே வந்திருக்கிறேன்.
திருவாரூர் எனக்குப் புதிய இடமல்ல. சிறு வயதில் இருந்தே திருவாரூரிலே தேர்தலிலே போட்டியிட வேண்டும் என்று நான் விரும்பியிருக்கிறேன். வேறு இயக்கத்திலிருந்து சிலர் இவரை இங்கே போட்டியிடவிடக் கூடாது என்று இந்த தொகுதியைத் தனித்தொகுதியாக்கி எனக்கு இடம் கிடைக்காத ஒரு நிலையை உருவாக்கினார்கள்.
இத்தனை ஆண்டுகள் பொறுத்திருந்து, வாய்ப்பு கிடைத்த போது விட்டு விடக் கூடாது என்று உங்களிடையே உங்களுக்குத் தொண்டு செய்ய, உங்களுக்கு பணியாற்ற, உங்களுக்கு வேலை செய்ய உங்களின் உத்தரவை நாடி இங்கு வந்திருக்கிறேன். நீங்கள் வாக்களித்து உங்கள் உத்தரவை வழங்கினால், நான் பணிந்து பாடுபடத் தயாராக இருக்கிறேன்.
டாக்டர் ராமதாஸ் பேசும்போது இந்த அணி எத்தகைய உறுதிவாய்ந்தது, உண்மையானது, கொள்கைகளுக்கு உடன்பாடானது என்பதையெல்லாம் சொன்னார்கள். இந்த கூட்டணி, இவ்வளவு உறுதியாக இருப்பதற்கு கொள்கைதான் காரணம். இந்த அணி பதவி ஆசையால், ஒன்றோடு ஒன்று ஒட்டப்பட்ட கட்சிகளின் கூட்டணி அல்ல. இது நமது கொள்கைகளை லட்சியங்களை நிறைவேற்ற உருவான அணி.
நான் இந்த தேர்தலை பொறுத்தவரை எனக்கு வாக்களியுங்கள், திமுகவுக்கு, கைக்கு, முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கேட்பேனே தவிர யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்று பேச விரும்பவில்லை. ஏனென்றால் திருவாரூரில் இருக்கும் அத்தனை பேரும் எனக்கு சொந்தக்காரர்கள், எனது உறவினர்கள். அரசியலில் நான் அங்குலம் அங்குலமாக உயரக் காரணமாகி விட்டவர்கள். நான்
அவர்கள் மீது எதிர்ப்பு கணைகளை வீசி லேசான காயத்தைக் கூட அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்த விரும்பவில்லை.
நான் தப்பித்தவறி ஒரு சிராய்ப்பை அவர்களின் இதயத்தில் ஏற்படுத்தினால் என்னை மன்னித்து விடுங்கள் என்று என் வேண்டுகோளை உங்கள் முன்னால் வைக்கிறேன். திமுக சார்பில் அண்மையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
தேர்தல் அறிக்கையில் சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் நிறைவேற்றுவோம். மற்றவர்களால் நினைவூட்டப்பட்டவைகள், கோடிட்டு காட்டப்பட்டவைகள், ஞாபகப்படுத்தப்பட்டவைகள், அறிவிக்கப்பட்ட திட்டங்களைத் தவிர புதியதாக இவற்றையும் சேர்த்தால் பரவாயில்லையே என்றும் திட்டத்தினால் வசீகரத்தினால் அல்ல, இதனால் ஏழை எளிய, சாமானிய மக்கள் பயன்படுவார்கள் என்றால் அதையும் இணைத்திருக்கிறேன். கடந்த தேர்தல் அறிக்கையில் லட்சக்கணக்கான குடிசை வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்று சொன்னது உண்டா? இல்லை.
பின்னர்தான் அந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆயிரம் வீடுகள் என்று ஆரம்பித்து லட்சோப லட்ச வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் இந்த அரசின் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள வீடுகளும் தொடர்ந்து கட்டப்பட்டு வருகிறது. கடந்த தேர்தல் அறிக்கையில் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பதவி ஏற்பு விழாவில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவித்து உடனே வழங்க ஆணை பிறப்பித்தேன்.
எனவே, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தி அறிவிப்பது தவறாகாது. இந்த தேர்தல் அறிக்கையில் அரசுக் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி பயில வரும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கும் முதலாம் ஆண்டிலேயே இலவசமாக மடிக்கணினி (லேப்டாப்) வழங்குவோம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மற்ற அறிவிப்புகளுக்கு போல இந்த அறிவிப்புக்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர், முற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் என்று பார்க்காமல் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கினால் என்ன என்று தோழமை கட்சியினர் கிசுகிசுத்தார்கள். ஆகவே அதை நிறைவேற்ற வேண்டும் என்பற்காக இப்போது அறிவிக்கிறேன், பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, முற்படுத்தப்பட்டவர்களும் என்று இந்த திட்டத்தில் எல்லோருக்கும் லேப்டாப் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்தகுடிமக்களுக்கும் அரசு உள்ளூர் பஸ்களில் கட்டணம் இல்லா இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அறிவித்தேன். என்னைப்போல பேராசிரியரைப் போல உள்ளவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்ட போது கூறினேன். 58 வயது, 59 வயதுக்காரர்கள், எங்களுக்கு பஸ் பாஸ் இல்லையா என்று குறைபட்டனர். 58 வயது, அதாவது அவர்கள் வேலைபார்த்து ஓய்வு பெறுகிறார்கள். அந்த வயதில் இருந்து இலவச பஸ்பாஸ் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தொகுதி வேட்பாளர் என்ற முறையில் உங்களை நான் அடிக்கடி சந்திப்பேன். தெருவுக்கு தெரு கூட்டம் போட்டு பேசுவேன். அடிக்கடி உங்களை சந்திப்பேன். உங்களுக்கு அது லாபம். எனக்கு கஷ்டம்; என்றாலும் உங்களின் மகிழ்ச்சி, உங்களின் புன்னகை, புளகாங்கிதம், முகமலர்ச்சி, நம்வீட்டு பிள்ளை வருகிறானே, என்னைவிட வயதில் பெரியவர்களுக்கு நான் பிள்ளைதான் என்ற உணர்வோடு என்னை இத்தனை ஆண்டுகளாக ஆதரவளித்து வளர்ப்பது போல தொடர்ந்து வளர்க்க வேண்டும். என்னை வெற்றி பெறச் செய்வீர்களோ அல்லது மாட்டீர்களோ என்பதற்காக அல்ல, கூட்டணி கட்சியினர் விரும்பியது போல 6வது முறையாக ஆட்சிக்கு வரவேண்டும் என்று நீங்கள் இட்ட கட்டளையை ஏற்று, நான் வெற்றி பெற நீங்கள் துணை நிற்க வேண்டும். திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று அதனால் முதல்வர் ஆனேன் என்றால் ‘இது என்னுடைய ஊர், அது என்னை கைவிடவில்லை’ என்று மற்றவர்களிடம் கம்பீரமாக நின்று கூற உதவும். எனவே எனக்கு நீங்கள் உத்தரவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
முதல்வர் பேசியபிறகு திமுக பொருளாளரும் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர், நாகை ஒருங்கிணைந்த மாவட்ட வேட்பாளர்களின் பெயர்களை வாசித்தார். ஒவ்வொருவராக வந்து முதல்வர் முன்னிலையில் நின்று வாழ்த்து பெற்றனர்.

No comments:

Post a Comment