கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 27, 2011

காங். வேட்பாளர்கள் முதல்வருடன் சந்திப்பு



தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள், முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானபோது, முதல்வர் கருணாநிதி சுற்றுப்பயணத்தில் இருந்தார். 26.03.2011 அன்று அதிகாலையில் முதல்வர் கருணாநிதி சென்னை திரும்பினார்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தனது மனைவி ஜெயந்தியுடன் சென்று, அறிவாலயத்தில் 26.03.2011 அன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அப்போது, மயிலாப்பூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்தி தங்கபாலு, முதல்வர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளர்கள் ஸ்ரீபெரும்புதூர் யசோதா, அறந்தாங்கி திருநாவுக்கரசர், தியாகராயநகர் செல்லக்குமார், திரு.வி.க.நகர் டாக்டர் நடேசன் ஆகியோரும், 26.03.2011 அன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். மேலும் நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது தங்கபாலு கூறுகையில், ‘’திமுக, காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதற்காக இரு கட்சிகளின் தொண்டர்களும் கடுமையாக உழைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
திருநாவுக்கரசர் கூறுகையில், ‘‘கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள், கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்போடு மக்கள் காத்திருக்கிறார்கள். முதல் அமைச்சராக வருவார். அதற்காக திமுக காங்கிரஸ் தொண்டர்கள் இந்த கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள். பொதுமக்களும் இந்த அரசு தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர் ’’ என்றார். பின்னர் பேசிய யசோதா, திராவிட முன்னேற்ற கழகத்துக்காகவும், நாட்டுக்காகவும் கலைஞர் தியாகம் செய்துள்ளார். பல போராட்டங்கள் நடத்தி சிறைக்கு சென்றுள்ளார். தமிழக மக்கள் மறக்க முடியாத அளவுக்கு சாதனைக்கு மேல் சாதனைகள் செய்துள்ளார். கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை எதிரணியில் உள்ளவர்கள் கலைஞரால் கொடுக்க முடியாது என்று சொன்னார்கள். இந்த முறை எதிரணியில் உள்ளவர்கள் கலைஞர் வழியில் தேர்தல் அறிக்கையை மக்கள் முன் வைக்கிறார்கள். ஆகையால் எதிர் அணியினரையும் இழுக்கும் சக்தி கலைஞருக்கு உண்டு என்றார்.

மதுரை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வரதராஜன், தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது வேலுச்சாமி, குழந்தைவேலு, குருசாமி, சிவக்குமார், முருகன் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment