தேர்தல் அறிக்கை என்ற பெயரில் ஜெயலலிதா புருடா விட்டுள்ளார் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கொளத்தூர் தொகுதியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். 27.03.2011 அன்று அவர் 2வது நாளாக திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 50 மற்றும் 54வது வட்டங்களில் வாக்கு சேகரித்தார். வழியெங்கும் ஆண்களும், பெண்களும் உற்சாகமாக பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர். திறந்த ஜீப்பில் மு.க.ஸ்டாலினுடன் மேயர் மா.சுப்பிரமணியன், வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ, கு.க.செல்வம் ஆகியோர் சென்றனர்.
வாக்கு சேகரிப்பின் போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் முதல்வர் கருணாநிதியின் ஆட்சி தொடர்ந்திட நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று கேட்பதற்காக உங்களை நாடி வந்திருக்கிறேன். தேர்தல் நேரம் மட்டுமல்ல, எந்த நேரத்திலும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், நாங்கள் உங்களுடன் இருப்பவர்கள். 5 ஆண்டு திமுக ஆட்சியில் 2006ம் ஆண்டு தேர்தலின் போது தரப்பட்ட எல்லாம் உறுதிமொழிகளும் நிறைவேற்றப்பட்டு விட்டன. 100க்கு 100 சதவீதம் திட்டங்களை நிறைவேற்றி விட்டுடோம் என்ற உரிமையோடு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். தேர்தல் நேரம் எத்தனையோ பேர் வருவார்கள், போவார்கள். அதை செய்தேன், இதை செய்தேன் என்பார்கள். அதுபோல தான் ஜெயலலிதா இந்த தேர்தலில் சில அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். அவை புதிய அறிவிப்புகள் அல்ல.
கருணாநிதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்ட போது இதை, இதை செய்வோம் என்றோம். அதன்படி, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய், பெண்கள் திருமண உதவி ஸீ25,000, சமத்துவபுரம், குடிசைக்கு பதிலாக காங்க்ரீட் வீடுகள், கலைஞர் காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம் போன்றவை நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த சாதனைகளை பட்டியல் போட்டு தந்து இருக்கிறோம். கடந்த 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா ஆட்சி நடந்தது. அவர் ஆட்சியில் ஏதாவது செய்தோம் என்று கூற முடியவில்லை. அவருக்கு தமிழ்நாட்டை பற்றி கவலை இல்லை. கொடநாடு பற்றி தான் கவலைப்படுவார். ஆனால் கருணாநிதி உங்களோடு இருந்து, தமிழ்நாட்டு மக்களுக்காக பல திட்டங்கள், அறிவிப்புகளை தீட்டி அவற்றை நிறைவேற்றுவார். அந்த அடிப்படையில் தேர்தல் அறிக்கையை தந்துள்ளார். நிச்சியமாக நிறைவேற்றுவார்.
உங்களுக்கு பணியாற்ற நான் காத்திருக்கிறேன். என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மகளிர் சுய உதவிக்குழு 1989ல் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, இன்று கம்பீரமாக வளர்ந்திருக்கிறது. மகளிர் சுய உதவிக்குழு இன்றி யாவரும், எந்த காரியமும் செய்ய முடியாது. அதற்கு காரணமாக இருந்த கருணாநிதி ஆட்சி மீண்டும் மலர வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்கான சுழல்நிதி ஸீ2 லட்சத்தில் இருந்து ஸீ4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதில் ஸீ2 லட்சம் மானியம். இதை பார்த்து விட்டு ஜெயலலிதா நாங்கள் ஸீ10 லட்சம் தருவோம் என்று அபாண்டமான புருடா விட்டுருக்கிறார். இதே ஜெயலலிதா கடந்த முறை ஆட்சியில் இருந்த போது, மகளிருக்கான பயிற்சி தொகையை ஸீ45 இருந்து ஸீ7.50 ஆக குறைத்தார். கருணாநிதி முதல்வர் ஆனதும் மீண்டும் அதை ஸீ45 ஆக்கினார்.
நான் அந்த துறை அமைச்சரானதும், நகர் மற்றும் மாநகர பகுதியில் சுழல் நிதி வழங்கப்பட்டது. உங்கள் நன்மைக்கு பாடுபடும் இந்த ஆட்சி தொடர வேண்டும். உங்களில் ஒருவனாக தொண்டாற்ற என்னை தேர்ந்தெடுங்கள். என் பணிகள் பற்றி நான் பெருமையோடு பேச தேவையில்லை. 2 முறை மேயராக இருந்து சென்னை மக்களுக்கு ஆற்றிய பணிகளை நீங்கள் அறிவீர்கள். உள்ளாட்சித்துறை ஆற்றிய பணிகளுக்காக பல பரிசுகள் கிடைத்துள்ளன. துணை முதல்வராக பொறுப்பேற்று முதல்வருக்கு மட்டுமல்ல, மக்களுக்காக தொண்டாற்ற என்னை ஒப்படைத்து இருக்கிறேன். இந்த தொகுதி வேட்பாளரான எனக்கு மாபெரும் வெற்றியை தாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment