கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, March 18, 2011

தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும் - கலைஞர்


திமுக வேட்பாளர் பட்டியல் 17.03.2011 அன்று வெளியிடப்பட்டது. திருவாரூரில் முதல்வர் கருணாநிதி போட்டியிடுகிறார். வில்லிவாக்கத்தில் நிதியமைச்சர் அன்பழகனும், கொளத்தூரில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் போட்டியிடுகின்றனர். வருகிற 24ம் தேதி முதல்வர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
17.03.2011 அன்று மாலை 5.30 மணிக்கு முதல்வர் கருணாநிதி வேட்பாளர் பட்டியலுடன் அறிவாலயம் வந்தார். அவருக்கு தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாலை 5.35 மணிக்கு முதல்வர் கருணாநிதி, வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு பெயர்களை படித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க சார்பில் நிறுத்தப்பட வேண்டிய வேட்பாளர்களை அறிவிப்பதற்காக குழு அமைத்து, ஆய்வு நடத்தி விருப்ப மனுக்கள் தந்த 15 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களிடம் நேர்காணல் நடத்தி, குழு தயாரித்த பட்டியலை இங்கே வெளியிடுகிறேன்.
இங்கே அறிவிக்கப்படாத தொகுதிகள், தோழமைக் கட்சிகளுடன் பேசி முடிவு எடுத்து விடப்பட்டவை. மீதமுள்ள இடங்களில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பெயர்களை இங்கே அறிவிக்கிறேன். பத்திரிகையாளர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். (வேட்பாளர்கள் பட்டியலை கருணாநிதி வெளியிட்டு பெயர்களை படித்தார்.)
முதல்வர் கருணாநிதி - திருவாரூர், நிதி அமைச்சர் அன்பழகன் - வில்லிவாக்கம், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் - கொளத்தூரில் போட்டியிடுகின்றனர். அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பின்னர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தி.மு.க. வேட்பாளர்களில் புதுமுகங்கள் எவ்வளவு பேர்?
புதுமுகங்கள் 58 பேர். பெண்கள் 11, பட்டதாரிகள் 70, வழக்கறிஞர்கள் 24, டாக்டர்கள் 3, முதுநிலை பட்டதாரிகள் 27.
நீங்கள் திருவாரூர் தொகுதிக்கு மாற என்ன காரணம்?
தொகுதி இருப்பது தான் காரணம்.
கடந்த தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்?
கதாநாயகியாக இருக்கும்.
ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்?
அவர்கள் உடல்நலம் இடம் தரவில்லை.
தேர்தல் பிரசாரத்தை எப்போது தொடங்குவீர்கள்?
வருகிற 23ம் தேதி திருவாரூரில் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள். 24ம் தேதி காலையில் நான் வேட்புமனு தாக்கல் செய்கிறேன்.
திருவாரூரில் நீங்கள் போட்டியிட காரணம் என்ன?
நான் முதன்முதலில் குளித்தலையில் போட்டியிடுவதற்குப் பதிலாக திருவாரூரில் தான் போட்டியிட்டிருக்க வேண்டும். அதுதான் என் சொந்த ஊர். அப்போது அங்கு நான் நிற்க கூடாது என்று அப்போதைய அரசியல்வாதிகளால் தனி தொகுதியாக ஆக்கப்பட்டது. இப்போது தனி தொகுதியிலிருந்து விடுபட்டு நான் நிற்கலாம் என்னும் அளவுக்கு கனி தொகுதியாகி இருக்கிறது.
119 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க.வால் பெரும்பான்மை பெற முடியுமா?
அந்த நம்பிக்கையோடு தான் களம் இறங்குகிறோம்.
இந்த தேர்தலில் எதை மையப்படுத்துவீர்கள்?
வருகிற 19ம் தேதி வெளியாகும் தேர்தல் அறிக்கையில் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்.
அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு இடையே நடக்கும் கடைசி யுத்தம் என்று கடந்த 2 தேர்தல்களில் ஜெயலலிதா கூறினார். இது 3ம் தேர்தல். தி.மு.க. வேட்பாளர்கள் எப்படி இதை எதிர்கொள்வார்கள்?
பெரியாரிடம் பெற்ற துணிவு, கொள்கை உறுதி, அண்ணாவிடம் பெற்ற அரசியல் பண்பாடு ஆகியவற்றுடன் இந்த தேர்தலில் ஈடுபடுவார்கள்.
தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையால் 3ம் அணி உருவாகுமா?
மற்றவர்களுக்கு ஏற்படும் சிக்கலைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைபவன் அல்ல.
வேட்பாளர்களில் பெண்களுக்கு 33 சதவீதம் வழங்கப்பட்டுள்ளதா?
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு இன்னும் சட்டமாகவில்லை. நாங்களாக வகுத்துக் கொண்டு மாநில அளவில் பெண்களுக்கு உரிய இடம் தரும் வாய்ப்பு வழங்கி வருகிறோம். நாடாளுமன்றத்தில் மகளிருக்கு இட ஒதுக்கீடு சட்டரீதியாக நிறைவேற்றப்படுமானால் இந்த கேள்வி பொருந்தும்.
துணை முதல்வர் ஏன் தொகுதி மாறினார்?
அவரையே கேளுங்கள்.
தேர்தல் பிரசாரத்திற்கு சோனியா காந்தி வருகிறாரா?
இன்னும் பிரச்சாரம் ஆரம்பிக்கவே இல்லையே.
இவ்வாறு கருணாநிதி கூறினார். வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் தி.மு.கவினர் பெருமளவில் குவிந்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள், கேமராமேன்கள், புகைப்படக்காரர்கள் திரண்டதால் அண்ணா அறிவாலயத்தில் உள்ள செய்தியாளர் அறை நிரம்பி வழிந்தது. பல தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன.
வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் முதல்வர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றனர்.

No comments:

Post a Comment