

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். வரும் 25ஆம் தேதி வில்லிவாக்கம் தொகுதியில் நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகனை ஆதரித்தும், கொளத்தூரில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆதரித்தும் பிரச்சாரம் செய்கிறார். 26ஆம் தேதி அன்று ஆர்.கே.நகர், எழும்பூர், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். 28ஆம் தேதி மேட்டுப்பாளையம், குன்னூர் தொகுதிகளிலும், 29ஆம் தேதி பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் தொகதிகளிலும், 30ஆம் தேதி பெரம்பலூர், குன்னம் தொகுதிகளிலும், 31ஆம் தேதி விராலிமலை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், ஏப்ரல் 1ஆம் தேதி தூத்துக்குடி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி, 2ஆம் தேதி உசிலம்பட்டி, திருமங்கலம், மதுரை மையம் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.
முதல் அமைச்சர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் திராவிடர் கழகம் சார்பில் திமுக அரசின் சாதனைகளை விளக்கி 26, 27, 28 ஆகிய தேதிகளில் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.
திமுகவுக்கு ஆதரவாக நடிகர் குமரிமுத்து தேர்தல் பிரசாரம் :
திமுகவுக்கு ஆதரவாக நடிகர் குமரிமுத்து, தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இதுதொடர்பாக, நடிகர் குமரிமுத்துவின் தேர்தல் பிரசார பயணம் குறித்து, திமுக தலைமை கழகம் 23.03.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
25ம் தேதி& கோவை, 26ம் தேதி& திருப்பூர், 27ம் தேதி& ஈரோடு, 28ம் தேதி& நாமக்கல், 29ம் தேதி& சேலம், 30ம் தேதி& கரூர், 31ம் தேதி& திருச்சி, ஏப்ரல் 1ம் தேதி& புதுக்கோட்டை, 2ம் தேதி& சிவகங்கை, 3ம் தேதி& ராமநாதபுரம், 4ம் தேதி& விருதுநகர், 5ம் தேதி& திருநெல்வேலி, 6ம் தேதி& தூத்துக்குடி, 7 மற்றும் 8ம் தேதி& கன்னியாகுமரி, 9ம் தேதி& தென்சென்னை, 10ம் தேதி& வடசென்னை, 11ம் தேதி & கொளத்தூர் தொகுதி (வடசென்னை).
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment