கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, March 24, 2011

6 வது முறையாக மீண்டும் கருணாநிதி முதல்வர் - கூட்டணி தலைவர்கள் பேச்சு23.03.2011 அன்று திருவாரூரில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேசியதாவது:
தங்கபாலு (தமிழக காங்கிரஸ் தலைவர்):
காங்கிரசை பொறுத்தவரை முதல்வர் கருணாநிதி மீதும் அவர் எடுக்கும் நடவடிக்கை மீதும் திமுக மீதும் சோனியாகாந்தி மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர். 2004ம் ஆண்டு காங்கிரசோடு திமுக கூட்டணி அமைத்து மதவாதத்தை வேரறுத்து, ஜனநாயகத்தை காப்பாற்றி, சோனியாகாந்தியை வரவழைக்க தென் இந்தியாவில் இருந்து முதல் குரல் கொடுத்தவர் முதல்வர் கருணாநிதி. அதை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம்.
முதல்வர் கருணாநிதி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையுமானால் நல்லாட்சி தொடரும். அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வராது என்பது எழுதப்பட்ட சரித்திரம்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்):
கருணாநிதி அரசியல்வாதி மட்டுமல்ல அரசியல் தியாகி. அவர் பலவித பரிமாணங்களை கொண்டவர். குறிப்பாக சிறந்த பகுத்தறிவாளர். அவரை அவரது சொந்த தொகுதியில் எதிர்த்து நிற்பவரால் டெபாசிட் கூட வாங்க முடியாது. திருவாரூர் தொகுதி வரலாறு படைக்க உள்ளது.
வாக்களித்தபடி திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம் என்று உறுதி கூறுகிறோம். இது வெற்றிக்கூட்டணி மட்டுமல்ல; சமூகநீதி கூட்டணியும் கூட.
தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்):

திருவாரூர் போகிறேன் என்று தேடி வந்திருக்கிறார் தலைவர் கலைஞர். திருவாரூரில் அவர் போட்டியிட்டாலும், 234 தொகுதிகளிலும் வேட்பாளர் கலைஞர் அவர்கள் தான். திருவாரூர் தொகுதியைப் போல 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். இது ஜோதிடம் அல்ல. ஆருடம் அல்ல. முதல் அமைச்சர் கலைஞரை மகிழ்விக்க பேசும் வார்த்தைகள் அல்ல.


கடந்த காலங்களில் கலைஞர் செய்துள்ள சாதனைகள். கலைஞர் செய்யப்போகும் சாதனைகளுக்கு சாட்சிகள் திமுக தேர்தல் அறிக்கை. கலைஞர் தலைமையில் உருவாகியுள்ள கூட்டணி வலிமை. இவை மூன்றும் திமுக கூட்டணி வெற்றிக்கு பிரச்சாரமாக இருக்கின்றன. கலைஞர் செய்து முடித்துள்ள திட்டங்களைப் பற்றி ஓட்டு கேட்கிறார். கலைஞர் செய்யப் போகும் திட்டங்களை பற்றி சொல்லி ஓட்டு கேட்கிறார்.


எதிரணியில் இருப்பவர்கள் கலைஞரை திட்டி திட்டியே ஓட்டு கேட்கிறார்கள். அவர்களிடத்தில் எந்த திட்டமும் இல்லை. சொல்லுவதற்கு திட்டம் இல்லை. கலைஞரை எதிர்ப்பவர்கள், கலைஞரை விமர்சிப்பதை மட்டுமே கொள்கையாக உள்ளவர்கள். வேறு எந்த கொள்கையும் அவர்களுக்கு கிடையாது. மொழி கொள்கையோ, இன பாதுகாப்பு கொள்கையோ, வேளாண்மையை பாதுகாக்க வேண்டும், நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோ, அடிதட்டு மக்களை உயர்த்த வேண்டும் என்ற மனிதநேய பார்வையோ, ஒடுக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிற புரட்சிகரமான போர் குணமோ, வேறு யாருக்கும் கிடையாது. எதிர்ப்பவர்கள் கலைஞரை விமர்சிப்பதை மட்டுமே கொள்கையாக உள்ளனர்.

திருவாரூர் போகிறேன் என்று தேடி வந்திருக்கிறார் தலைவர் கலைஞர். திருவாரூரில் அவர் போட்டியிட்டாலும், 234 தொகுதிகளிலும் வேட்பாளர் கலைஞர் அவர்கள் தான். திருவாரூர் தொகுதியைப் போல 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். இது ஜோதிடம் அல்ல. ஆருடம் அல்ல. முதல் அமைச்சர் கலைஞரை மகிழ்விக்க பேசும் வார்த்தைகள் அல்ல.


கடந்த காலங்களில் கலைஞர் செய்துள்ள சாதனைகள். கலைஞர் செய்யப்போகும் சாதனைகளுக்கு சாட்சிகள் திமுக தேர்தல் அறிக்கை. கலைஞர் தலைமையில் உருவாகியுள்ள கூட்டணி வலிமை. இவை மூன்றும் திமுக கூட்டணி வெற்றிக்கு பிரச்சாரமாக இருக்கின்றன. கலைஞர் செய்து முடித்துள்ள திட்டங்களைப் பற்றி ஓட்டு கேட்கிறார். கலைஞர் செய்யப் போகும் திட்டங்களை பற்றி சொல்லி ஓட்டு கேட்கிறார்.

எதிரணியில் இருப்பவர்கள் கலைஞரை திட்டி திட்டியே ஓட்டு கேட்கிறார்கள். அவர்களிடத்தில் எந்த திட்டமும் இல்லை. சொல்லுவதற்கு திட்டம் இல்லை. கலைஞரை எதிர்ப்பவர்கள், கலைஞரை விமர்சிப்பதை மட்டுமே கொள்கையாக உள்ளவர்கள். வேறு எந்த கொள்கையும் அவர்களுக்கு கிடையாது. மொழி கொள்கையோ, இன பாதுகாப்பு கொள்கையோ, வேளாண்மையை பாதுகாக்க வேண்டும், நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோ, அடிதட்டு மக்களை உயர்த்த வேண்டும் என்ற மனிதநேய பார்வையோ, ஒடுக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிற புரட்சிகரமான போர் குணமோ, வேறு யாருக்கும் கிடையாது. எதிர்ப்பவர்கள் கலைஞரை விமர்சிப்பதை மட்டுமே கொள்கையாக உள்ளனர்.

கலைஞர் தோழமைகளை அரவணைத்து விட்டுக்கொடுக்கிறார். விட்டுக்கொடுக்கும் பண்பு என்பது தலைமைக்கு உரிய மிகப்பெரிய பண்பு. இன்றைக்கு அனைத்து தோழமைக் கட்சிகளுக்கும் அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு, 119 தொகுதிகளில் மட்டும் திமுக போட்டியிடுகிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு பெருந்தன்மை தலைவராக கலைஞர் இருக்கிறார்.

தனித்தன்மையோடு ஆட்சி அமைக்க வேண்டுமானால் 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் கலைஞர் அவர்கள் உதயசூரியன் சின்னத்திலே, போட்டியிடும் தொகுதிகள் 119 என்று அறிவித்திருக்கிறார். நாங்கள் தனிப்பெருண்பான்மை பெறவேண்டும் என்றால் 160 இடங்களில் போட்டியிடுவோம். உங்களுக்கு 4, 2 என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.

உடன்பாடு செய்யவில்லை என்றால் நான் விருப்பம்போல் தொகுதி பட்டிலை அறிவிக்கிறேன் என்று அறிவித்திருக்க வேண்டும். அப்படி கலைஞர் செய்யவில்லை. சிறிய இயக்கங்களையும் அழைத்து, தலைவர்களை அழைத்து அமர வைத்து, மணிகணக்கில் பேச வைத்து, என்ன
சொல்கிறாôர்கள் என்பதை கேட்டு, அதன் அடிப்படையில் தொகுதிகளை பங்கீடு செய்து தந்தவர் கலைஞர். 75 ஆண்டு காலம் அரசியல் களத்தில் நின்று போராடி வருபவர் கலைஞர்.

இந்த பொதுக்கூட்டத்தில் உறுதி அளிக்கிறேன். பாமகவுடன் இணைந்து பாடுபட்டு திமுக கூட்டணியை வெற்றி பெற செய்வோம். கலைஞரை 6வது முறையாக முதல் அமைச்சராக அமர வைப்போம்.


பெஸ்ட் ராமசாமி (கொங்குநாடு முன்னேற்றக் கழக தலைவர்) :
தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு பல சலுகைகள் இடம் பெற்றுள்ளது. இது விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.
காதர் மொய்தீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்):
கொடிக்கால பாளையம் பள்ளிவாசலுக்கு சென்றிருந்த போது ஒரு முதியவர் சொன்னார் “கடந்த முறை திமுகவுக்கு வாக்களித்தேன். காரணம் தேர்தல் அறிக்கை தான். இந்த முறை திமுகவுக்கு தான் வாக்களிப்பேன். ஏனென்றால் கலை ஞரின் ஆட்சி சாதனைகளுக்காக என்று கூறினார்.
கி.வீரமணி (தி.க.தலைவர்) :
5 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருந்தது. தற்போது கதாநாயகியாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். செய்யாததை செய்து, சொல்லாததும் செய்கிறார் என அனைவராலும் பாராட்டு பெற்றவர் முதல்வர் கருணாநிதி. மீண்டும் கருணாநிதி முதல்வராகுவார் என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்.
பேராயர் எஸ்றா சற்குணம்:
முந்தைய ஆட்சியில் ஒரே நாளில் 4 லட்சம் அரசு ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிலையை முதல்வர் கருணாநிதி மாற்றினார். அவரது ஆட்சி தொடர வேண்டும் என்று விரும்புகின்றோம்.
என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில அமைப்பாளர்):
சட்டப்பேரவை தேர்தலில் உலகமே வியக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி மீண்டும் 6வது முறையாக முதல்வராக வருவார். இதில், எந்த சந்தேகமும் இல்லை.
சுப வீரபாண்டியன் (திராவிடர் பேரவை):

திமுக தேர்தல் அறிக்கை எப்படி இருக்கிறது என்று ஒரு நண்பர் கேட்டார். எதிர் அணியினருக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையையும் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து தூள் தூளாக ஆக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. இது ஒரு புதிய போக்கு. பொதுவாக தேர்தல் நேரம் என்றால், கூட்டணியிலே எந்தெந்த கட்சியினர் இருக்கிறார்கள். எந்த கட்சிக்கு எந்த தொகுதி. எந்த தொகுதியில் எந்த வேட்பாளர் என்பதை அறிந்துகொள்பதிலேதான் மக்கள் ஆர்வமாக இருப்பார்கள்.

ஆனால் இப்போதுதெல்லாம் திமுக தேர்தல் அறிக்கை எப்போது வருகிறது. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு மக்களிடையே பெரும் ஆர்வம் இருக்கிறது. பொதுவாக சொல்லவேண்டுமானால் இந்த தேர்தல் அறிக்கையை நிதிநிலை அறிக்கையாக மக்கள் பார்க்கிறார்கள். வெறும் தேர்தல் அறிக்கை அல்ல. அரசு வெளியிட்டுள்ள ஆணை என்று மக்கள் பார்க்கிறார்கள். நம்பிக்கை கொடுக்கிற அளவுக்கு தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது.

திமுக கூட்டணி எப்படி ஜனநாயகமாக இருக்கிறது. அந்த கூட்டணி எப்படி ஜனநாயகத்திற்கு எதிராக இருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு செய்தியை மட்டும் கூறுகிறேன். திமுக கூட்டணியில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது அனைவரும் மகிழ்ந்தார்கள். ஆனால் அந்த கூட்டணியில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது, கூட்டணியில் இருந்த அத்தனைபேரும் அதிர்ந்தார்கள். அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானதும், தேமுதிக அதிர்ச்சி, சிபிஐ அதிர்சசி, சிபிஎம் அதிர்ச்சி என்று செய்திகள் வெளியாகின. சரியாக சொல்லவேண்டும் என்றால் திமுக கூட்டணி மகிழ்ச்சி கூட்டணி. அந்த கூட்டணி அதிர்ச்சி கூட்டணி.

நான் நம்பினேன் 80 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண்ணிலே காலூன்றி இருக்கிற பொதுவுடைமை கட்சி தலைமை ஏற்று மூன்றாவது அணியை அமைக்கும் என்று. ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், 8 ஆண்டுகள் கூட ஆகாமல் இருக்கிற ஒரு கட்சியிடம் போய், நீங்கள் தலைமை ஏற்க வேண்டும் என்று கோயம்பேட்டுக்கு நடையாய் நடந்தார்கள்.

கோயம்பேட்டில் என்ன செய்தார்கள் என்றால், அந்த அம்மாவுடைய உருவபொம்மையில் ஒரு பச்சை சேலையை உடுத்தி, அதற்கு மேல் நான் சொல்லுவது நாகரீகமாக இருக்காது. அவ்வளவு அநாகரிகமும் அளங்கோலமும் நடந்து முடிந்த பின்னர், அந்த அம்மா அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

நான் என்ன நினைக்கிறேன் என்றால், அரசியலுக்கு புதிதாக வந்தாலும் கோயம்பேட்டுக்காரருக்கு சரியாக புரிகிறது. என்ன செய்தால் அவர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பார் என்று தெரிகிறது. பாவம் நெடுக்காலமாக அரசியலிலே இருக்கும் அண்ணன் வைகோவுக்கு இது தெரியவில்லை. எனவே திமுக கூட்டணி வெற்றி கூட்டணி

ஸ்ரீதர்வாண்டையார் (மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர்):

கடந்த முறை நான் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டேன். திமுக தேர்தல் அறிக்கை வெளியான பிறகு மக்கள் எல்லோரும் அந்த அறிக்கை பற்றியே பேசினார்கள். அந்த அறிக்கையால் தான் நான் தோற்றேன். இந்த முறையும் புதிய தேர்தல் அறிக்கையை முதல்வர் வெளியிட்டுள்ளார். இந்த முறையும் தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் முதல்வர் கருணாநிதி என்ற பெருமையை அவருக்கு பெற்றுத் தருவோம்.
பஷீர் அகமது (தேசிய லீக் தலைவர்):
சொன்னதை செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்று ஆட்சிக்கு வந்தார் முதல்வர். அவர் சொன்னது போல சொன்னதையும் செய்தார், சொல்லாததையும் செய்து முடித்துள்ளார். சுயமரியாதை சுடராக இன்று சொந்த மண்ணுக்கு வந்துள்ளார்.
செல்ல முத்து( உழவர் உழைப்பாளர் கட்சி):
கடந்த முறை ஆட்சிக்கு வரும்போது ரூ.2க்கு அரிசி போடுவேன் என்றார். அதை நிறைவேற்றினார். இன்று கிரைண்டர், மிக்சி கொடுப்பதாக சொன்னதுடன் வாஷிங்மிஷினும் வரும் என்கிறார்.
சந்தானம் (பார்வர்டு பிளாக் தலைவர்) :
கடந்த தேர்தல் அறிக்கையில் வெளியிட்டதையும், வெளியிடாததையும் கலைஞர் செய்து முடித்து இருக்கிறார்.
இந்த தேர்தல் அறிக்கையில் கர்ப்பிணிப் பெண்கள் உதவித்திட்டம், பெண்கள் திருமண உதவித்திட்டத்தில் உதவித்தொகையினை உயர்த்தியதன் மூலம் பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சொந்த ஊரான திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிப்பெற்று 6&வது முறையாக தமிழக முதல்வராக கலைஞர் ஆவார்.

No comments:

Post a Comment