கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, March 24, 2011

திமுகவுக்கு 10 தொகுதி ஒதுக்கீடு : புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரசுடன் உடன்பாடு


புதுச்சேரி மாநிலத் தேர்தலுக்கு காங்கிரஸ் மற்றும் திமுக இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. திமுகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகள் இணைந்து போட்டியிடுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தொகுதி பங்கீடு குழுவினரும், திமுக தொகுதி பங்கீடு குழுவினரும் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் 22.03.2011 அன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் புதுச்சேரி மாநிலத்தில் திமுகவுக்கு 10 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்குவது எனவும், மற்றும் ஒரு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி அளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்:
1. நெல்லித்தோப்பு, 2. முதலியார்பேட்டை, 3. முத்தியால்பேட்டை, 4. உருளையான்பேட்டை,5. தட்டான்சாவடி, 6. உப்பளம்,7. காரைக்கால் தெற்கு,8. ஊசுடு, 9. உழவர்கரை, 10. நீரவி திருப்பட்டினம்

புதுவை மாநிலத்திற்கான
திமுக வேட்பாளர் பட்டியல் :
புதுவை சட்டபேரவை தேர்தலில் திமுகவுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
1. நெல்லிதோப்பு - ஆர்.வி.ஜானகிராமன்.
2. முதலியார்பேட்டை - எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியம்.
3. உருளையன்பேட்டை - ஆர்.சிவா.
4. முத்தியால்பேட்டை - நந்தா டி.சரவணன்.
5. உப்பளம் - அனிபால் கென்னடி.
6. தட்டாஞ்சாவடி - ஏ.கே.ரமேஷ்.
7. உழவர்கரை - அ.ஜான்குமார்.
8. ஊசுடு - ஏ.ஏழுமலை.
9. காரைகால் (தெற்கு) - ஏ.எம்.எச்.நாஜிம்.
10. நிரவி & திருமலைராயன்பட்டினம் - கீதா ஆனந்தன்.

இந்த அறிவிப்பை தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment