கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, March 28, 2011

திமுக கூட்டணியின் வெற்றி தொடரும் - முதல்வரை சந்தித்த பின் ஜி.கே.வாசன் பேட்டிமுதல்வர் கருணாநிதியை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், 28.03.2011 அன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் 10.10 மணி முதல் 10.40 மணி வரை சந்தித்தார். அரைமணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்புக்கு பின், நிருபர்களிடம் வாசன் கூறியதாவது:
கடந்த தேர்தலின்போது தந்த வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி முழுமையாக நிறை வேற்றினார். மீண்டும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இந்த முறையும் தேர்தல் அறிக்கையை தந்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் உள்பட பல தேர்தல்களில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று, வெற்றி கூட்டணியாக திகழ்கிறது. மக்களின் நம்பிக்கையை பெற்ற அணி இது. தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை கருத்தில் கொண்டு இந்த அணி பணியாற்றி வருகிறது. எனவே சட்டசபை தேர்தலிலும் இது வெற்றி கூட்டணியாக அமையும்.
நாளை மறுதினம் தொடங்கி 11 நாட்கள் நான் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அதற்காக முதல்வரை சந்தித்து பேசினேன். கூட்டணியின் வெற்றிக்கான பல்வேறு விஷயங்களை பற்றி விவாதித்தோம். தேர்தல் பிர சாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கி பேசுவேன். திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்றியை தேடித் தரும். மீண்டும் நிறைவேற்ற இருக்கும் திட்டங்கள் பற்றி தேர்தல் அறிக்கையாக முதல்வர் தந்துள்ளார். அதை மக்கள் முழுமையாக ஏற்றிருக்கிறார்கள். எனவே இந்த அணியை மக்கள் அமோக வெற்றி பெறச் செய்வார்கள். மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை மக்கள் நிராகரித்து விட்டார்கள்.
காங்கிரசில் போட்டி வேட்பாளர்கள் பலர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது பற்றி கேட்கிறீர்கள். இந்த கூட்டணி வெற்றிக்காக காங்கிரசார் அனைவரும் பாடுபட வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

No comments:

Post a Comment