கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, March 22, 2011

வாடிப்பட்டியில் மு.க.அழகிரி தலைமையில் ஆலோசனைக்கூட்டம்


வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி சட்டசபை தேர்தல் பணி குறித்து திமுக கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மத்திய அமைச்சரும், தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி தலைமை வகித்தார். அவருக்கு சோழவந்தான் தொகுதி பாமக வேட்பாளர் இளஞ்செழியன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ, மதுரை துணை மேயர் மன்னன், மதுரை மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் அயூப்கான், ஒன்றிய செயலாளர்கள் பாலராஜேந்திரன், கென்னடி, நகர செயலாளர்கள் பால்பாண்டியன், முனியாண்டி, பழனிவேல் மற்றும் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேனி, கலாவதிராஜா, ஒன்றிய தலைவர்கள் வனிதா ரெங்கராஜன், அன்னகாமு, ஊராட்சி தலைவர்கள் பண்ணைசெல்வம், ஆறுமுகம், நாகுபிள்ளை, மாவட்ட இளைஞரணி பாஸ்கரன், ஒன்றிய திமுக ராஜா என்ற பெரியகருப்பன், சிறுமணி, பாமக மாவட்ட செயலாளர் கிட்டு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற மக்களிடம் எவ்வாறு பிரசாரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன. முன்ன தாக சமீபத்தில் மறைந்த வாடிப்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமச்சந்திர கென்னடி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

No comments:

Post a Comment